கடந்த 27ஆம் தேதி கரூருக்கு பிரச்சாரத்திற்கு சென்ற விஜயை பார்க்க வந்தவர்களில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கரூரில் விஜய் பார்க்க வந்தவர்கள் துடிதுடித்து உயிரிழந்து கொண்டிருக்க, விஜயோ களத்தில் நிற்காமல் சென்னை வந்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. கரூர் சம்பவம் அந்த கட்சிக்கு பெரும் கரும்புள்ளியாக மாறியது.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் நிகழ்ந்த உயிரிழப்புகள் தமிழக வெற்றி கழகத்திற்கு பெரும் பின்னடைவாக மாறியது. அதிலிருந்து தமிழக வெற்றி கழகம் தற்போது மீண்டு வருகிறது. சம்பவம் நடந்த 16 நாட்களுக்கு பிறகு கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை விரைவில் விஜய் சந்திக்க உள்ளார்.
இந்த நிலையில் இயக்குனரும், விஜயின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர் சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், மகாத்மா காந்தி, அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்… இவங்கள்லாம் மறைந்தும் மக்கள் மனசுல வாழ்ந்துக்கிட்டிருக்காங்க. எம்.ஜி.ஆரின் ஏழு படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளேன். அவர் அரசியலுக்கு வந்த பிறகு தனக்காக எந்த சொத்தும் சேர்க்கவில்லை. அதன் பிறகு அப்படிப்பட்ட அரசியல்வாதிகள் கண்ணுக்குத் தெரியவில்லை. மறைந்தும் வாழ்கிற மனிதர்கள் அரிது.
அந்த ஒரு இடத்தை மனதில் வைத்துக்கொண்டு, வாழ்கிற நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு, தானும் தமிழ்நாட்டு சரித்திரத்தில் இடம் பெற வேண்டும் என்ற புனிதமான நோக்கத்துடன் விஜய் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர் என்னுடைய மகன் என்று நினைக்கும்போது ஒரு தகப்பனாக எனக்குப் பெருமையாக இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.
Read more: 27 பேர் பலி! காசாவில் மீண்டும் பயங்கரம்!. ஹமாஸ் – டௌமுஷ் பழங்குடியினருக்கிடையே மோதல்!.



