இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு வெளுக்க போகும் கனமழை…! எந்தெந்த மாவட்டத்தில் தெரியுமா…?

rain 1

தமிழகத்தில் இன்று முதல் 19-ம் தேதி வரை 6 நாட்கள் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: ”தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று மற்றும் நாளை ஒருசில இடங்களிலும், 16 முதல் 19-ம் தேதி வரை பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இன்று கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும், நாளை திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப் பகுதிகள், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

17-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களிலும், 18ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

19-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Vignesh

Next Post

உங்கள் வீட்டு பீரோவில் கண்ணாடி இருக்கா..? இந்த திசையில் இருந்தால் பணமே சேராது..!! உடனே மாத்துங்க..!!

Tue Oct 14 , 2025
வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் வாஸ்து சாஸ்திரத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதில் ஏற்படும் சிறு மாற்றங்கள் கூட வாஸ்து தோஷத்தை ஏற்படுத்தி, குடும்பத்தில் நிதிப் பிரச்சினைகள் மற்றும் அமைதியின்மையைத் தூண்டலாம் என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். உங்கள் வீட்டில் செல்வத்தை சேமிக்கும் பீரோ எந்தத் திசையில் வைக்கப்பட்டுள்ளது மற்றும் அதன் நிறம் என்ன என்பது பொருளாதார வளத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். பீரோவுக்கு வெள்ளை, சாம்பல், வெளிர் பழுப்பு போன்ற நடுநிலையான […]
Bero 2025

You May Like