குஷி..! டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ் + கருணை தொகை…!

tasmac 2025

மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் தகுதியுடைய கடைப்பணியாளர்களுக்கு 20% வரை போனஸ், கருணை தொகை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் சி, டி பிரிவு ஊழியர்கள், மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் தகுதியுடைய கடைப்பணியாளர்களுக்கு 20% வரை போனஸ், கருணை தொகை வழங்கப்படும். அதேபோல், கூட்டுறவு சங்கங்களில் ஒதுக்கப்படக்கூடிய உபரித் தொகையை கணக்கில் கொண்டு அச்சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20 சதவீதம் வரை போனஸ் வழங்கப்படும். உபரி தொகை இல்லாமல் உள்ள சங்க பணியாளர்களுக்கு 10 சதவீத போனஸ் மற்றும் கருணை தொகை வழங்கப்படும்.

போனஸ் சட்டத்தின் கீழ் வராத நிகரலாபம் ஈட்டும் சங்கங்களின் பணியாளர்களுக்கு 20% வரை போனஸ், கருணைத் தொகை வழங்கப்படும். போனஸ் சட்டத்தின் கீழ் வராதநிகர லாபம் ஈட்டாத தலைமைச் சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்களாக இருப்பின் அவற்றில் பணிபுரிவோருக்கு ரூ.3000, தொடக்க சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.2,400-ம் கருணை தொகையாக வழங்கப்படும்.

Vignesh

Next Post

செல்வ செழிப்பாக வாழ வேண்டுமா..? இந்த நாளில் மகாலட்சுமியையும், குபேரனையும் வழிபடுங்கள்..!!

Fri Oct 17 , 2025
செல்வச் செழிப்பிற்கு அதிபதியான மகாலட்சுமியையும், அந்தச் செல்வத்தைக் காக்கும் காவலரான குபேரனையும் தீபாவளி போன்ற திருநாட்களில் ஒரு சேர வழிபட்டு வந்தால், பக்தர்கள் வாழ்வில் செல்வம் நிலைத்து செழிக்கும் என்பது இந்துக்களின் தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையாகும். தொன்மையான காலத்தில் இருந்தே “வாழப் பிறந்தவனுக்கு வடக்கு” என்ற பழமொழி குபேரனின் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது. குபேரன் நீங்காத செல்வத்தை அள்ளித் தரக்கூடியவர் என்றாலும், உண்மையான செல்வத்தின் கடவுள் மகாலட்சுமிதான். பக்தர்களுக்குச் செல்வத்தை முறையாகப் […]
Poojai Money 2025

You May Like