தமிழ்நாட்டில் வீடு கட்டுவோருக்கு புது ரூல்ஸ்..!! பார்க்கிங் வசதி இனி கட்டாயம்..!! தமிழ்நாடு அரசு அரசாணை..!!

Car Parking 2025

சொந்த வீடு என்ற கனவை நிறைவேற்றும் பலர், வாகனங்களுக்காகத் தங்கள் வீட்டிலேயே போதுமான இடவசதி ஒதுக்கத் தவறுவதால், கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் சாலைகளில் நிறுத்தப்பட்டுப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தமிழகத்தின் நகர்ப்புறங்களில் பெரும் சவாலாக உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, தமிழ்நாடு அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது.


ஏற்கனவே புதிதாக வீடு கட்டுவோருக்கு வாகன நிறுத்துமிட வசதியை (Parking Facility) கட்டாயமாக்கியிருந்தாலும், தனி வீடுகளுக்கான விதிமுறைகளில் நிலவிய குழப்பங்களைத் தீர்க்கும் வகையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை தற்போது புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 3,300 சதுர அடி வரையிலான தனி வீடுகள் கட்டுவோர் கட்டாயமாக 2 கார்கள் மற்றும் 2 இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான இடத்தை ஒதுக்க வேண்டும். அதேபோல், 3,300 சதுர அடிக்கு மேற்பட்ட வீடு கட்டினால், 4 கார்கள் மற்றும் 4 இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான இடவசதி கட்டாயம் ஒதுக்கப்பட வேண்டும்.

இந்த விதிமுறைகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களுக்குப் போலவே, தனி வீடுகளுக்கும் இனி பொருந்தும். மேலும், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இணையதள சேவை மற்றும் தொலைத்தொடர்புக்கான கட்டமைப்பை ஏற்படுத்துவதும் அவசியம் என்று இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : உங்கள் வாழ்நாளில் இனி கல்லீரல் பிரச்சனையே வராது..!! இந்த காய்கறிகளை உணவில் அடிக்கடி சேர்த்துக்கோங்க..!!

CHELLA

Next Post

சீனாவை பின்னுக்குத் தள்ளிய இந்தியா.. அமெரிக்கா, ரஷ்யாவுக்குப் பிறகு நாம் தான் மிகவும் சக்திவாய்ந்த நாடு, பாகிஸ்தான் லிஸ்டில் இல்லை..!

Fri Oct 17 , 2025
‘ஆபரேஷன் சிந்துர்’ நடவடிக்கையின் போது இந்திய ராணுவத்தின் வலிமையை உலகம் முழுவதும் புரிந்துகொண்டது. நமது விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவி பல பயங்கரவாத முகாம்களை அழித்தது. அதன் பிறகு, ஆத்திரமூட்டும் செயல்களைச் செய்த பாகிஸ்தான், தொடர்ச்சியான தாக்குதல்களால் அச்சுறுத்தப்பட்டு, மூன்று குளங்களை நீர்த்துப்போகச் செய்தது. இது இந்திய ராணுவம், குறிப்பாக விமானப்படை எவ்வளவு வலிமையானது என்பதை வெளிப்படுத்தியது. இருப்பினும், இந்திய விமானப்படை சமீபத்தில் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளின் வரிசையில் இணைந்துள்ளது. […]
air force

You May Like