வங்கக்கடல் பகுதிகளில் வரும் 21-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி…! வானிலை மையம் எச்சரிக்கை…!

Cyclone 2025

திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.


மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில், கேரளா – கர்நாடகா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 21-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறக்கூடும்.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 24-ம் தேதி வரை பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை முதல் 24-ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Vignesh

Next Post

தீபாவளிக்கு கடையில் ஸ்வீட் வாங்குறீங்களா..? உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்து..!! எச்சரித்த உணவு பாதுகாப்புத்துறை..!!

Mon Oct 20 , 2025
தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை, பட்டாசு, இனிப்பு ஆகியவை தான் முதலில் நினைக்கு வரும். முந்தைய தலைமுறையினர் ஜிலேபி, லட்டு, முறுக்கு போன்ற இனிப்பு மற்றும் கார வகைகளை வீட்டிலேயே சுகாதாரமாகத் தயாரித்த காலம்போய், இன்றைய சூழலில் பெரும்பாலானோர் கடைகளையே நாடுகின்றனர். இந்நிலையில், பண்டிகை நாட்களை குறிவைத்து, தரமற்ற உணவுப் பொருட்களைப் பயன்படுத்தி பலகாரங்கள் தயாரிக்கும் மோசடிகள் அதிகரித்துள்ளன. இத்தகைய ஆபத்தில் இருந்து நுகர்வோர் தங்களின் ஆரோக்கியத்தைத் தற்காத்துக் கொள்ள […]
Diwali Sweets 2025

You May Like