குழந்தைக்கு யார் அப்பா..? கணவனுக்கும் கள்ளக்காதலனுக்கும் நடந்த வார்..!! கருவில் இருந்த சிசு உள்பட 3 பேர் கொலை..!!

Sex 2025 2 1

மத்திய டெல்லியின் ராம் நகர் பகுதியில் திருமணத்தை மீறிய உறவு தொடர்பான தகராறில் கருவில் இருந்த சிசு உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இல்லத்தரசியான ஷாலினி (22), ஆட்டோ ஓட்டுநரான தனது கணவர் ஆகாஷ் (23) மற்றும் ஆஷு என்கிற ஷைலேந்திரா (34) ஆகியோரின் கள்ள உறவே இந்த மொத்த சம்பவத்திற்கும் காரணமாக அமைந்துள்ளது. இரண்டு மகள்களுக்குத் தாயான ஷாலினி, ஆஷுவால் கருவுற்றதாக கூறப்பட்ட நிலையில், தனது கணவருடன் தொடர்ந்து சேர்ந்து வாழ விரும்புவதாக தெரிவித்துள்ளார்.


நேற்று இரவு, குதுப் சாலையில் உள்ள ஷாலினியின் தாயாரைச் சந்தித்துவிட்டு, ஆகாஷும் ஷாலினியும் ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களை வழிமறித்த ஆஷு, ஆகாஷை கத்தியால் தாக்க முயற்சித்துள்ளார். தாக்குதலை ஆகாஷ் தடுத்து நிறுத்த, ஆட்டோவில் இருந்த ஷாலினியைப் பார்த்த ஆஷு, ஓடிச் சென்று அவரை சரமாரியாகக் கத்தியால் குத்தியுள்ளார்.

மனைவியைக் காப்பாற்ற முயன்ற ஆகாஷுக்கும் கத்திக் குத்து விழுந்தது. இருப்பினும், விடாமல் போராடிய ஆகாஷ், ஆஷுவிடமிருந்து கத்தியைப் பறித்து அவரையே குத்திக் கொன்றார். பின்னர், தகவலறிந்த ஷாலினியின் சகோதரர் ரோஹித், காயமடைந்த ஷாலினியையும் ஆகாஷையும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். போலீசார் ஆஷுவை அதே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால், ஷாலினியும் ஆஷுவும் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஷாலினியை காப்பாற்ற முயன்றதில் ஆகாஷுக்குப் பலத்த கத்திக் குத்துக் காயங்கள் ஏற்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

குழந்தையின் தந்தை யார்..?

ஷாலினியின் தாயார் ஷீலா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குடும்பத்தினர் அளித்த பேட்டியில், ஷாலினிக்கும் ஆகாஷுக்கும் சில வருடங்களுக்கு முன்பு உறவில் விரிசல் ஏற்பட்டபோது, அவர் ஆஷுவுடன் பழகி சிறிது காலம் அவருடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார். பின்னர் சமரசம் ஏற்பட்டு இருவரும் மீண்டும் ஒன்றாக வாழத் தொடங்கியுள்ளனர்.

இந்தச் சூழலில் ஷாலினி கருவுற்றபோது, அந்தக் குழந்தைக்குத் தான் தான் தந்தை என்று ஆஷு உரிமை கொண்டாடி பிரச்சனை செய்துள்ளார். ஆனால், தனது கருவில் இருப்பது ஆகாஷின் குழந்தை என்று ஷாலினி திட்டவட்டமாகக் கூறியதே இந்தக் கொடூர சம்பவத்திற்குக் காரணம் என்று குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : பக்கத்து வீட்டுக்கார பெண்ணுக்கு நோட்டம் போட்ட போலீஸ் மனைவி..!! உயிரோடு எரித்துக் கொலை..!! காரணத்தை கேட்டு ஆடிப்போன காவல்துறை..!!

CHELLA

Next Post

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து!. இந்தியப் பொருட்களை வாங்குமாறு குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!.

Mon Oct 20 , 2025
பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்டோபர் 20, 2025) தனது நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார். சமூக ஊடக தளத்தில் ஒரு பதிவில், பிரதமர் மோடி, “எனது சக குடிமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள். இந்த புனித தீபத் திருநாள் அனைவரின் வாழ்க்கையையும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்லிணக்கத்தால் ஒளிரச் செய்யட்டும்” என்று எழுதினார். பிரதமர் மோடி பண்டிகைகளின் போது உள்நாட்டுப் பொருட்களை வாங்குமாறு மக்களை வலியுறுத்தி […]
pm modi manipur 1757671639 1 1

You May Like