ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. குறிப்பாக ரூ.80,000லிருந்து ரூ.97,000 வரை விலை உயர்ந்து விற்பனையானது.. இன்னும் சில நாட்களில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சென்னையில் இன்று காலை சென்னை இன்று காலை ரூ.2,080 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.1,440 குறைந்துள்ளது.. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.180 குறைந்து ரூ.12,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு சவரனுக்கு ரூ.1,440 குறைந்து ரூ.96,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதே போல் வெள்ளியின் விலையும் இன்று மாலை குறைந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி ரூ.6 குறைந்து ரூ.182க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.1,82,000க்கு விற்பனையாகிறது..
Read More : 26 லட்சம் விளக்குகள்.. கின்னஸ் உலக சாதனை படைத்த அயோத்தி! உலகளவில் டாப் 10 விளக்குக் காட்சிகள் இதோ..



