சென்னை28 பட நடிகர் அரவிந்த் ஆகாஷின் பிரம்மாண்ட திருமணம்..! 50 வயதில் புதிய வாழ்க்கை.. வைரலாகும் புகைப்படங்கள்..!

actor aravin akash mrg 7

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அரவிந்த் ஆகாஷ் 50 வயதை நெருங்கிய நிலையில், தனது திருமணத்தை கோலாலம்பூரில் கோலாகலமாக நடத்தியுள்ளார்.திருமணத்தை குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக செய்து கொண்டார். இந்த விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் வாழ்த்துகளை பெற்று வருகின்றது.


பஞ்சாபைச் சேர்ந்த அரவிந்த் ஆகாஷ், நடிகராக வேண்டும் என்ற கனவுடன் சென்னைக்கு வந்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார். ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்த அவர், படையப்பா, ஹே ராம், உயிரிலே கலந்தது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால் நீண்ட காலமாக பெரிய வாய்ப்புகளுக்காக காத்திருக்க வேண்டியிருந்தது.அதே நேரத்தில் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்த அவர், கிருஷ்ண தாசி மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பின்னர் மலையாளத்தின் நந்தனம் படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். அதனை தொடர்ந்து நடித்துவந்த இவர் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 600028 திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் அரவிந்த் ஆகாஷின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் நண்பர்கள் குழுவில் ஒருவராக அவர் வெளிப்படுத்திய இயல்பான நடிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாஸ் என்கிற மாசிலாமணி, சென்னை 600028 – பாகம் 2, மாநாடு உள்ளிட்ட பல வெங்கட் பிரபு படங்களில் தொடர்ந்து நடித்தார். பல ஆண்டுகளாக சினிமாவில் இருந்தாலும், தனது தனிப்பட்ட வாழ்க்கையை பெரிதாக வெளிப்படுத்தாமல் இருந்த அரவிந்த் ஆகாஷிடம் ரசிகர்கள் அடிக்கடி “எப்போது திருமணம்?” என்று கேள்வி எழுப்பி வந்தனர். தற்போது அந்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவரது திருமணம் மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் கோலாகலமாகா நடைபெற்றுள்ளது .இந்த விழாவில் இயக்குநர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, வைபவ், விஜய் வசந்த் உள்ளிட்ட சென்னை 600028 படக்குழுவைச் சேர்ந்த நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நண்பர்கள் குழு மீண்டும் ஒன்றாக இணைந்திருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. “தாமதமானாலும் அழகான தொடக்கம்”, “புதிய வாழ்க்கைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்” என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Also Read:பெண் குழந்தையின் பெற்றோர்களா நீங்கள் ..! அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை ..!

maha

Next Post

கேஸ் சீக்கிரம் காலியாகுதா? அப்போ உடனே இதைப் பண்ணுங்க!

Thu Jul 2 , 2026
இல்லத்தரசிகளுக்கு சவாலான வீட்டு வேலைகளில் ஒன்று கேஸ் பர்னரை சுத்தம் செய்வதுதான். புதிதாக வாங்கியபோது பளபளப்பாக இருக்கும் பர்னர், சில நாட்களிலேயே எண்ணெய் பசை, உணவுத் துகள்கள் மற்றும் அழுக்குகள் படிவதால் அதன் நிறம் மாறி மங்கலாகிவிடும். அதுமட்டுமல்லாமல், பர்னரின் துளைகள் அடைபடுவதால் தீ சரியாக எரியாமல், சமையலுக்கும் அதிக நேரம் எடுக்கும். இதன் விளைவாக எரிவாயுவும் தேவையில்லாமல் வீணாகிறது. ஆனால் கவலைப்பட வேண்டாம். கேஸ் பர்னரை சுத்தம் செய்ய […]
lpg gas cooking

You May Like