சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, ரூ.92,000-க்கு விற்பனையாகிறது..
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. குறிப்பாக தங்கம் விலை ரூ.86,000-ல் இருந்து தற்போது ரூ.97,000ஐ தொட்டுள்ளது.. அதே போல் கடந்த வாரமும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வந்த நிலையில் இந்த வாரத்தில் மீண்டும் குறைந்தது.. குறிப்பாக இந்த வார தொடக்கத்தில் சுமார் ரூ.3,700 வரை தங்கம் விலை குறைந்தது.. பின்னர் நேற்று காலை உயர்ந்த தங்கம் விலை மாலையில் குறைந்தது..
இந்த நிலையில் சென்னையில் இன்று காலை மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று காலை தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ரூ.11,500க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, ரூ.92,000-க்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்களும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..
எனினும் இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.. ஒரு கிராம் வெள்ளி ரூ.170க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ1,70,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..



