திமுக கூட்டணியில் இருந்து விலகியது தொடர்பாக விசிக தலைவர் தொல் திருமாவளவன் விளக்கம் அளித்தார்.. அப்போது பேசிய அவர் “ அரசியல் சூழல் காரணமாக தவெக கூட்டணியில் இணைந்தோம். ஸ்டாலினோ, உதயநிதியோ எங்கள் முடிவை எதிராக பார்க்கவில்லை.. தேர்தலுக்கு முன்பே திமுக கூட்டணியை கூட்டணியை பல தரப்பினர் முயன்றனர்.. 2 ஆண்டுகளாக என்னை குறிவைத்து காய்களை நகர்த்தினர்.. ஆனால் திமுக கூட்டணியை பலவீனப்படுத்த இடம் தரமாட்டேன் என்பதை நடைமுறைப்படுத்தி காட்டினேன்..
தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் இந்த கூட்டணியை காப்பாற்றும் வலிமை எனக்கு இல்லை.. ஸ்டாலினிடம் கூறிவிட்டு தான் தவெகவுக்கு ஆதரவு என்ற முடிவை எடுத்தோம்.. என்னை மட்டும் குறிவைத்து சமூக வலைதளங்களில் விமர்சித்து வருவது ஏன் என்பது தெரியவில்லை..
தேர்தலுக்கு பின் கூட்டணியை காப்பாற்ற எனக்கு எந்த முகாந்திரமும்.. தேர்தல் முடிவுகள் வந்த கையோடு காங்கிரஸ் எடுத்த முடிவு, அடுத்தடுத்து நிகழ்ந்த அரசியல் காட்சிகள் இவை எல்லாம் அனைவருக்கும் தெரியும்.. நாங்கள் அவசரப்பட்டு முடிவெடுக்கவில்லை.. எங்கள் கட்சிக்கு ஒரு வரைமுறை இருக்கிறது.. அந்த வரையறைகளின் படி, உயர்நிலைக் குழுவில் விவாதித்து, அந்த முடிவை ஸ்டாலினிடம் சொல்லி தான் முடிவெடுத்தோம்..
எங்கள் நேர்மையையோ அல்லது எங்கள் தூய்மையை களங்கப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை.. பதவி ஆசைக்காக நான் தவெகவுக்கு ஆதரவு கொடுக்கவில்லை.. கட்சியின் நலன்களை கருத்தில் கொண்டு தான் அமைச்சரவையில் இடம்பெற்றோம்.. விசிக நிர்வாக குழுவில் உள்ள பலரும் தவெக அமைச்சரவையில் இணையவே விருப்பம் தெரிவித்தனர்.. நான் அமைச்சராக வேண்டும் என கட்சியினர் விரும்பினர்..
ஆனால் அவர்களின் விருப்பத்திற்கு நான் இணங்கவில்லை.. கட்சியின் மூத்த உறுப்பினர், கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு அமைச்சராக வேண்டும் என நினைத்தேன்.. தவெக அமைச்சரவையில் இடம்பெற்றது மிக மிக நிதானமாக எடுக்கப்பட்ட ஒரு முடிவு.. கூட்டணிக்கு நாங்கள் உற்றத்துணையாக இருந்திருக்கிறோம் என்ற நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குவது, களங்கப்படுத்துவது ஒரு திட்டமிட்ட அவதூறு..” என்று தெரிவித்தார்..



