fbpx

#Breaking: மிக்ஜாம்’ புயல் உருவானது – வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது.

வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்தது. வரும் 5ம் தேதி முற்பகலில் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே புயலாக கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் வங்கக்கடலில் உருவாகும் 4வது புயல் இதுவாகும்.

தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் செல்ல தேசிய பேரிடர் மீட்பு படையின் 18 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. கடலோரக் காவல்படை, ராணுவம் மற்றும் கடற்படையின் மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்கள், கப்பல்கள் மற்றும் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மற்றும் புதுச்சேரி அரசு தேவையான அனைத்து தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. உயிர்ச்சேதம் ஏற்படாமல் தடுக்கவும் சொத்துக்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு ஏற்படும் சேதத்தை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

சீனாவால் அதிரும் உலகநாடுகள்!… நிமோனியாவை தொடர்ந்து அலறவிடும் வெள்ளை நுரையீரல்!… என்ன நடக்கிறது?

Sun Dec 3 , 2023
கடந்த சில மாதங்களில், “வெள்ளை நுரையீரல்” தோற்றத்தால் வகைப்படுத்தப்படும் நிமோனியா வெடிப்பு, சீனா, அமெரிக்கா மற்றும் நெதர்லாந்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைகளில் அதிர்ச்சி அலைகளை அனுப்பியுள்ளது. உலகளாவிய சமூகம் இந்த சுகாதார நெருக்கடியுடன் போராடுகையில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் இந்த நோய்க்கான தோற்றம், அறிகுறிகள் மற்றும் சாத்தியமான சிகிச்சைகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள அயராது உழைத்து வருகின்றனர். சீனாவில் இப்போது பரவும் நிமோனியா பாதிப்பு கிட்டதட்ட உலகின் மற்ற பகுதிகளிலும் […]

You May Like