தமிழ்நாட்டில் 1 முதல் 14 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி..!! – அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..

minister masu

தமிழகத்தில் 1 முதல் 14 வயதுடைய பெண்களுக்கு இலவசமாக புற்றுநோய் தடுப்பூசி போடப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருக்கிறார்.


சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “1 முதல் 14 வயது பெண்களுக்கு இலவசமாக புற்றுநோய் தடுப்பூசி போடப்படும். இதற்காக ரூ.38 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் முடிந்த பிறகு திட்டம் அமலுக்கு வரும். தனியார் மருத்துவமனையில் அதிக செலவில் தடுப்பூசி எடுத்துக் கொள்ள முடியாதவர்கள் கூட இதன் நன்மை பெறுவார்கள்.” என்றார்.

புற்றுநோய் மற்றும் தடுப்பூசி முக்கியத்துவம்: புற்றுநோய் மனிதர்களுக்கு 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது என்பது வரலாற்று பதிவுகளால் தெரியும். கடந்த 100–150 ஆண்டுகளில் மனிதகுலம் புற்றுநோயைக் குறைக்கும் முயற்சியில் தீவிரமாகப் போராடி வருகிறது. கீமோதெரபி போன்ற சிகிச்சைகள் பயன்படுகின்றன, ஆனால் அவற்றுக்கும் சிக்கல்கள் உள்ளன.

தடுப்பூசி செயல்பாடு: உடலில் ஒரு குறிப்பிட்ட வைரஸ் புரதத்தை ஊசி மூலம் செலுத்தி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்டுகிறது. எதிர்காலத்தில் அந்த வைரஸ்கள் வளர்ந்தாலும், நோய் எதிர்ப்பு மண்டலம் அவற்றை அடையாளம் கண்டு அழித்துவிடும். இதை பெண்களை அதிகம் பாதிக்கும் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் மற்றும் கல்லீரல் புற்றுநோய் தடுப்பதற்கும் பயன்படுத்தலாம். இந்த முன்னெடுப்பு சமூகத்தில் வரவேற்கப்பட்டுள்ளது, சிறு வயதிலேயே பெண்களை புற்றுநோயின் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

Read more: சேலம் வழக்கில் பயங்கர ட்விஸ்ட்..!! அடித்த மாணவர்கள் அப்பாவி.. அடி வாங்கியவர் மீது பாய்ந்தது போக்சோ..!! நடந்தது என்ன..?

English Summary

Minister M. Subramanian has announced that free cancer vaccination will be given to girls aged 1 to 14 in Tamil Nadu.

Next Post

முடி உதிர்தலை குறைத்து கூந்தலை வலுவாக்கும் ஹோம்மேட் ஹேர் பேக்.. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க..!!

Sun Oct 26 , 2025
Homemade hair pack that reduces hair fall and strengthens hair.. Try it yourself..!!
hair 1

You May Like