உட்கார்ந்து வேலை செய்றீங்களா..? நடைப்பயிற்சியை விட பல மடங்கு நன்மை தரும் ஸ்க்வாட்..!! – மருத்துவர் அட்வைஸ்

squats 1 1 1 min min 1 1 11zon 1

மாலை வேளையில் சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்வது நாள் முழுவதும் உட்கார்ந்திருந்ததற்கான ஈடு ஆகிவிடும் என நினைப்பவர்களுக்கு அபோலோ மருத்துவமனையின் நியூராலஜிஸ்ட் டாக்டர் சுதீர் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


டாக்டர் கூறியதாவது: நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் மெட்டாபாலிசம் குறைவு, உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயம் அதிகரிக்கும். ஒரு நாள் 30 நிமிட நடைப்பயிற்சி செய்தாலும், நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பால் ஏற்படும் சேதத்தை சரிசெய்ய முடியாது.

45 நிமிடத்திற்கு ஒருமுறை 10 ஸ்க்வாட் செய்வது இரத்த ஓட்டம், மெட்டாபாலிசம், இதய செயல்பாடு மற்றும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். சிறிய இடைவெளி உடற்பயிற்சி, ஒரே நேரத்தில் செய்யப்படும் பெரிய நடைப்பயிற்சியை விட பல மடங்கு பலனளிக்கும் என்றார்.

ஸ்க்வாட் செய்வதன் நன்மைகள்:

  • உடல் நிலைமை மேம்படும்
  • காயம் ஏற்படும் அபாயம் குறையும்
  • உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்
  • தினசரி செயல்களில் வலிமை அதிகரிக்கும்
  • கலோரி எரிப்பு அதிகரிக்கும்
  • விளையாட்டு திறனும் உயரும்

முக்கிய எச்சரிக்கை:

* முதல் முறையாக செய்யும் முன் சரியான நடைமுறை பின்பற்ற வேண்டும்.

* மூட்டு பிரச்சனைகள் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.

* சிறிய அளவில் தொடங்கி பழக வேண்டும், அதிகம் செய்யக்கூடாது.

* நீண்ட நடைப்பயிற்சி மட்டும் போதாது.. நாள் முழுவதும் இடைவெளி சிறிய இயக்கங்கள் உண்மையான மாற்றத்தை தரும்.

இறுதியாக நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்வதால் பாதிப்புகளை சரி செய்ய முடியாது. உண்மையான மாற்றம் ஏற்பட 45 நிமிடத்திற்கு ஒருமுறை சிறிய உடற்பயிற்சிகள் செய்வதிலேயே உள்ளது. ஸ்க்வாட் போன்ற எளிய பயிற்சிகள் உங்கள் இதயத்தையும், இரத்த சர்க்கரையையும் பாதுகாக்கும்.

Read more: இந்தியாவில் 3 தலைநகரங்கள் கொண்ட மாநிலம் எது தெரியுமா..? பலருக்கு தெரியாத தகவல்..!

English Summary

Do you work while sitting? Squats are many times more beneficial than walking..!! – Doctor’s Advice

Next Post

வலுப்பெறும் மொந்தா புயல்.. சென்னை உட்பட 11 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்..!! - வானிலை அப்டேட்..

Sun Oct 26 , 2025
Cyclone Mondha is strengthening.. Alert issued for 11 districts including Chennai..!
rain1

You May Like