நேரில் வரவில்லை… தவெக தலைவர் விஜய் கொடுத்த ரூ.20 லட்சம் நிதியுதவியை திருப்பி அனுப்பிய பெண்…!

tvk vijay karur 2025

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தவெக தலைவர் விஜய் அனுப்பிய ரூ.20 லட்சத்தை திருப்பி அனுப்பிய பெண். உயிரிழந்த ரமேஷ் என்பவரின் மனைவி விஜய் நேரில் வராத காரணத்தினால் பணத்தை திருப்பி அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.


கரூரில் கடந்த செப்-27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் விஜய் சந்தித்து ஆறுதல் கூறும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதற்காக, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நேற்று முன்தினம் 2 பேருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்டு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். உயிரிழந்தவரின் குடும்பத்தைச் சேர்ந்த 5 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு விஜய் சந்தித்துள்ளார். நேற்று காலை 8.15 மணிக்கு தவெக தலைவர் விஜய் விடுதிக்கு வந்து, உயிரிழந்த 37 குடும்பத்தில் இருந்து 235 பேரை சந்தித்து ஆறுதல் கூறினார். இதில் உயிரிழந்த அஜிதா என்ற கல்லூரி மாணவியின் குடும்பத்தில் இருந்து மட்டும் யாரும் வரவில்லை. ஒவ்வொரு குடும்பத்தினரையும் தனித்தனியாக சந்தித்து சுமார் 5 நிமிடம் பேசி ஆறுதல் கூறியதாக கூறப்படுகிறது.

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தவெக தலைவர் விஜய் அனுப்பிய ரூ.20 லட்சத்தை திருப்பி அனுப்பிய பெண். உயிரிழந்த ரமேஷ் என்பவரின் மனைவி விஜய் நேரில் வராத காரணத்தினால் பணத்தை திருப்பி அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

வீட்டில் எந்த துளசி செடியை வைக்க வேண்டும்..? எந்த கிழமையில் எப்படி வழிபட்டால் செல்வம் பெருகும்..?

Tue Oct 28 , 2025
இந்து மதத்தில் துளசி செடிக்கு ஒரு புனிதமான இடம் உண்டு. பெரும்பாலான வீடுகளில் துளசி செடியை வைத்து வழிபடுவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இருப்பினும், துளசியில் உள்ள வகைகள், அவற்றின் சிறப்புப் பண்புகள் மற்றும் நடும் திசைகள் குறித்த சரியான புரிதல் பலருக்கு இருப்பதில்லை. துளசியில் முக்கியமாக ராம துளசி (வெள்ளை துளசி) மற்றும் கிருஷ்ண துளசி (கருந்துளசி அல்லது ஷ்யாமா துளசி) என இரண்டு வகைகள் உள்ளன. ராம துளசி […]
Thulasi 2025 1

You May Like