விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட்டில், மனோஜ் வேலை பார்க்கும் ஷோரூமுக்கு ஒரு பாம்பாட்டி வருகிறார். ஒரு அயர்ன் பாக்ஸ் வாங்க வந்திருப்பதாகச் சொல்லி, அங்கிருக்கும் பொருட்களையெல்லாம் பார்க்கச் செல்கிறார்.
அப்போது ரோகிணிக்கு போன் வர தள்ளி சென்றுவிட்டார். அந்த சமயம் பாம்பாட்டி கொண்டு வந்த பாம்பு ரோகினி வைத்திருந்த பைக்குள் சென்றுடுவிட்டது. இதை யாரும் கவனிக்கவில்லை. ரோகினி அதை அறியாமால் வீட்டிற்கு கொண்டு சென்றுவிட்டாள். கடைசியில் அந்த பாம்பு விஜயா ரூமுக்கு சென்றுவிட்டது. அங்கே பாம்பைப் பார்த்ததும் பதறியடித்துக் கொண்டு வெளியே வந்து கத்துகிறார். பின்னர்,முத்து ரூமுக்குள் சென்று, அந்தப் பாம்பை ஒருவழியாகப் பையில் பிடித்துவிடுகிறார்.
அதன்பின்னர், மனோஜுக்கு ஷோரூமில் இருந்து போன் வருகிறது. காலையில் கடைக்கு வந்திருந்த பாம்பாட்டி, பாம்பைக் காணவில்லை என்று தேடி வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதன் பிறகுதான், மனோஜின் ஷோரூமில் இருந்துதான் அந்தப் பாம்பு வீட்டிற்கு வந்திருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிய வருகிறது. இதற்கிடையே விஜயா இதற்கெல்லாம் காரணம் நீதான் டி என ரோகினியை கத்துகிறாள்.
Read more: தென்காசிக்கு 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.. விவரம் இதோ..



