ஐ.எஸ்.பி.யின் முதுகலை மற்றும் மேல்நிலை மேலாண்மை கல்வித் திட்டங்களில் 50 சதவீத கல்விக் கட்டண சலுகை வழங்கப்படுகிறது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் படைவீரர் நலத் துறை, ஓய்வுக்குப் பிறகு குடிமை சமூக வாழ்க்கைக்குத் திரும்பும் ராணுவ வீரர்களுக்குக் கல்விக் கட்டணச் சலுகை வழங்குவதற்காக இந்திய வணிகப் பள்ளி (ஐ.எஸ்.பி) நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. டிசம்பர் 7-ம் தேதி கொண்டாடப்படும் ஆயுதப்படை கொடி தினத்தையொட்டி, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டுச் செயல்பாட்டின் கீழ், முதுகலை மற்றும் மேல்நிலை மேலாண்மைக் கல்வித் திட்டங்களில் சேர்பவர்களுக்கு ஐ.எஸ்.பி 50 சதவீதக் கல்விக் கட்டணச் சலுகையை வழங்கும். ஆண்டுக்கு ரூ. 2.3 கோடி வரை இந்தச் சலுகை இருக்கும். இந்தச் சலுகை ஒவ்வொரு கல்வியாண்டிலும் 22 முன்னாள் படைவீரர்களுக்குப் பயனளிக்கும். ஆயுதப்படை வீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கு ஏற்கெனவே உள்ள பரந்த திறன்களுடன் ஆழமான மேலாண்மை திறன்களை வழங்குவதை இந்த ஒத்துழைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.