அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று கோபிச்செட்டிபாளையம் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது “ அதிமுக உடைந்துவிட கூடாது என்பதற்காக இரண்டு முறை கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை.. இபிஎஸ் பொதுச்செயலாளராக இருந்த போது அவர் எடுத்த முடிவுகளால் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. பொதுச்செயலாளராக தேர்தல் களத்தில் வெற்றியை காணாதவர் இபிஎஸ்..
எல்லோரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நோக்கில் தான் தேவர் ஜெயந்தி தினத்தில் அனைவருடனும் பேசினேன்.. தேவர் ஜெயந்திக்கு சென்ற போதும் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று பேசினேன். அதற்கு கிடைத்த பரிசு தான் அதிமுகவில் இருந்து நீக்கம்.. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களோடு நான் பேசியது உண்மை தான்..
அதிமுகவில் சர்வாதிகார போக்கில் யாரை வேண்டுமானாலும் நீக்கலாம் எடப்பாடி இருக்கிறார்.. அதிமுகவில் இருந்து நான் நான் நீக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது.. கண்ணீர் வடிக்கிறேன்.. எடப்பாடி அதிமுகவுக்கு வருவதற்கு முன்பே அதிமுக எம்.எ.ஏவாக இருந்தவன் நான்.. 1972 முதல் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி இருக்கிறேன்..
53 ஆண்டுகாலம் பணியாற்றிய எனக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டிருக்கலாம்.. அந்தியூர் தொகுதி தோல்விக்கு எனது துரோகம் காரணம் என இபிஎஸ் பேசியிருக்கிறார்.. துரோகத்திற்கான நோபல் பரிசு இபிஎஸ்-க்கு தான் கொடுக்க வேண்டும்.. எல்லோருக்குமே துரோகம் செய்தவர் தான் இபிஎஸ்.. சசிகலாவிடம் இருந்து எடப்பாடி எப்படி முதல்வர் பதவியை பெற்றார் என்பது நாடறியும்.. அவர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று பேசி வருகிறார்.. எம்.ஜி.ஆர் கொண்டு வந்த விதியை மாற்றியவர் இபிஎஸ். ஆட்சியை காப்பாற்றிய பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியவர்..” என்று காட்டமாக விமர்சித்தார்.
Read More : Flash : இபிஎஸ் எடுத்த முடிவுகளால் தான் அதிமுக தோல்வி அடைந்தது.. செங்கோட்டையன் ஓபன் டாக்..!



