“திமுக ஆட்சியில் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகின்றனர்.. முதல்வர் கம்பு சுற்றுகிறார்..” நயினார் விளாசல்..!

nainar nagendran mk Stalin 2025

கோவை விமான நிலையம் அருகே நேற்றிரவு தனது ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவில் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. ஆண் நண்பரை தாக்கிவிட்டு மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய 3 இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.. 3 பேரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.. இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..


இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ நேற்றிரவு கோவை விமான நிலையத்தின் பின்புறம் தனியார் கல்லூரி மாணவி ஒருவர் மர்ம கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவி முழு உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

கடந்த நான்கரை ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் ஒருவித பதற்றத்துடனேயே நமது பொழுது விடிகிறது, எந்த ஊரில் எந்தப் பெண்ணின் வாழ்வு சூறையாடப்பட்டதோ என்ற பயத்துடனேயே செய்தித்தாள்களை நாம் புரட்ட வேண்டியிருக்கிறது, வீட்டில் இருந்தாலும் சரி வெளியில் போனாலும் சரி பெண்கள் வேட்டையாடப்படுகிறார்கள், “தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன்” என வெட்டி வசனம் பேசும் திமுகவின் ஆட்சியில் நமது வீட்டுப் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகின்றனர், இந்த அவலங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களோ கவலையின்றி கம்பு சுற்றிக் கொண்டிருக்கிறார். இதுதான் நாடு போற்றும் நல்லாட்சியின் லட்சணமா?” என்று தெரிவித்துள்ளார்..

Read More : கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை.. CM ஸ்டாலின் வெட்கி தலைகுனிய வேண்டும்.. அண்ணாமலை காட்டம்..

RUPA

Next Post

“உலகத்தை 150 முறை அழிக்கும் அளவுக்கு அணு ஆயுதங்கள் எங்கக்கிட்ட இருக்கு”: ட்ரம்ப் பரபரப்பு கருத்து..

Mon Nov 3 , 2025
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அணு ஆயுத பரிசோதனைகளை மீண்டும் தொடங்கியதற்கான தனது முடிவை நியாயப்படுத்தியுள்ளார். ரஷ்யா, சீனா, வடகொரியா ஆகிய நாடுகள் தங்களது ஆயுத திட்டங்களைத் தொடரும் நிலையில், அமெரிக்கா மட்டும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது என அவர் கூறியுள்ளார். அதே நேரத்தில், அமெரிக்காவிடம் “உலகத்தை 150 முறை வெடிக்கச் செய்யும் அளவு” அணு ஆயுதங்கள் இருப்பதாகவும் டிரம்ப் ஒப்புக்கொண்டார். CBS சேனலின் 60 Minutes நிகழ்ச்சியில் […]
trump nuclear

You May Like