வினாத்தாள் லீக் ஆனா 10 வருஷம் ஜெயில்.. ரூ.10 கோடி அபராதம்..!! மத்திய அரசின் அதிரடி சட்டம்..!!

அரசுப் போட்டி தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் 2024ம் ஆண்டு பொதுத்தேர்வுகள் முறைகேடுகள் தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. சமீப காலமாக வினாத்தாள் கட்சி விவகாரம் பூதாகரமாகி வந்த நிலையில், இச்சட்டத்தில் திருத்தங்கள் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.


இந்த சட்ட திருத்த மசோதா லோக்சபாவில், எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் அமைச்சர் ஜிதேந்திர சிங் தாக்கல் செய்தார். தண்டனைகளை கடுமையாக்கும் வகையில் இச்சட்டத்தில் முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன.

புதிய திருத்தங்கள் :

* தேர்வு முறைகேட்டில் ஈடுபடுவோருக்கான சிறை தண்டனை 3 ஆண்டில் இருந்து 5 ஆண்டுகளாக உயர்வு.

* முறைகேடு செய்பவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கலாம்.

* தனி நபர் குற்றங்களுக்கான அபராத தொகை, ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்வு

* வினாத்தாள் கசிவை நெட்ஒர்க் ஆக செய்யும் கும்பலுக்கு குறைந்தபட்ச தண்டனை, 5 ஆண்டில் இருந்து 7 ஆண்டுகளாக உயர்வு. குறைந்தபட்ச அபராதம் ரூ.1 கோடியில் ரூ.10 கோடியாக உயர்வு

* தேர்வு நடத்துதல், வினாத்தாள் அச்சிடுதல், கணினி தொழில்நுட்ப ஆதரவு போன்ற பணிகளில் ஈடுபடும் தனியார் ஏஜென்சிகள் வினாத்தாளை கசியவிட்டால், ரூ.5 கோடி வரை அபராதம்.

* வினாத்தாள் கசிவில் சிக்கும் ஏஜென்சிகளுக்கான தடைக்காலம் இரட்டிப்பாக்கப்படும். 8 ஆண்டுகள் வரை பொதுத்தேர்வு நடத்த முடியாது.

* ஏஜென்சிகளின் இயக்குநர்கள், மூத்த அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை; ரூ.5 கோடி அபராதம் விதிக்கப்படும்.

* வினாத்தாள் கசிவு தொடர்பான விசாரணையை புலனாய்வு அமைப்புகள் 2 மாதங்களில் முடிக்க வேண்டும்.

* வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாநிலத்திலும் விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும்.

* விரைவு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்யலாம். அந்த மனுக்கள் 3 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும்.

Read More : அசைவ பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்..! ஜூலை 31 முதல் சிக்கன் கிடைக்காது..! கடையடைப்பு போராட்டம் அறிவிப்பு..!

Next Post

வேட்புமனுவில் மர்மம்? ஸ்டாலினுக்கு எதிராக பாய்ந்த வழக்கு..!! ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு..!!

Mon Jul 27 , 2026
சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மீது தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவரது வேட்புமனுவில், திமுக அறக்கட்டளை மற்றும் சொத்து விபரங்களை மறைத்ததாக வழக்கறிஞர் திருஞானசம்பந்தன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தேர்தல் விதிகள் படி, வேட்பாளர்கள் தங்களின் சொத்துக்கள், பொறுப்புகள் மற்றும் அறக்கட்டளை தொடர்புகளை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும். ஆனால், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின், திமுக அறக்கட்டளை பற்றிய தகவல்களை வேட்புமனுவில் […]
MK Stalin Campaign 2

You May Like