புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு…!

krishnaswamy 2025

நள்ளிரவில் பிரச்சாரம் மேற்கொண்டதால் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


புதிய தமிழகம் கட்சி சார்பில் 2026 ஜனவரி 7ம் தேதி மதுரையில் 7வது மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு தொடர்பாக பல்வேறு மாவட்டங்களில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தற்போது விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிருஷ்ணசாமி மாநாட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதோடு, ஒவ்வொரு பகுதியிலும் பொதுமக்களின் குறைகளையும் அதற்கான தீர்வுகளையும் கேட்டறிந்து வருகிறார். அதன்படி, நேற்று நள்ளிரவு சுமார் 1 மணி முதல் 2 மணி வரை ஆமத்தூர் வெங்கடேஸ்வரா நகரில் கிருஷ்ணசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது, அப்பகுதி பொதுமக்களின் குறைகள் மற்றும் நீண்டநாள் கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். ஆனால், காவல்துறை அணுமதி அளித்த நேரத்தை கடந்து நள்ளிரவு நேரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டது தொடர்பாக கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சி கிழக்கு மாவட்டச் செயலாளர் குணம், வெள்ளூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் மூர்த்தி ஆகியோர் மீது ஆமத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Vignesh

Next Post

தூள்..! அரசு தொழிற்பயிற்சியில் சேரும் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 + இலவச பஸ் பாஸ்...! உடனே விண்ணப்பிக்கவும்...!

Wed Nov 5 , 2025
திருவொற்றியூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பல்வேறு தொழில் பிரிவுகளுக்கு 14-ம் தேதி வரை நேரடி சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும், திருவொற்றியூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் நேரடி சேர்க்கை நவம்பர்‌ 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற சேர விரும்பும் மாணவர்கள் அனைத்து சான்றிதழ்களுடன் […]
Tn Govt 2025

You May Like