‘உங்கள் ஸ்கின் கேர் வழக்கம் என்ன?’ ஹர்லீன் கவுர் கேள்வி.. பிரதமர் மோடி சொன்ன பதில் என்ன? நீங்களே பாருங்க..!

modi harleen

2025 ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை வெற்றியைக் கொண்டாடும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை நேற்று சந்தித்தார்.. லோக் கல்யாண் மார்க் (Lok Kalyan Marg) உள்ள தனது இல்லத்தில், 2025 ICC மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை வரவேற்று சந்தித்து பாராட்டினார்.


“நாங்கள் இறுதியாக கோப்பையை வென்றோம்” என்று மகளிர் அணித் தலைவி ஹர்லீன் கவுர் பிரதமர் மோடியிடம் தெரிவித்தார்.. “2017-ல் உங்களைச் சந்தித்தபோது, நாங்கள் கோப்பையை வெல்ல முடியவில்லை. ஆனால் இம்முறை, நாங்கள் உலக சாம்பியன்கள் ஆனதில் பெருமைப்படுகிறோம். மீண்டும் உங்களைச் சந்திப்பது பெருமை, நாடு பெருமைப்படும் வகையில் தொடர்ந்து விளையாடுவோம்,” என்று அவர் கூறினார்.

இதை தொடர்ந்து ஹர்லீன் கவுர் டியோல் பிரதமர் மோடியின் ஸ்கின் கேர் குறித்து கேள்வி எழுப்பினார்.. “சார், உங்கள் ஸ்கின் கேர் ரகசியம் என்ன?” என்ற ஹர்லீனின் கேள்விக்கு பிரதமர் மோடி நகைச்சுவையாக பதிலளித்தார்.. “நான் இதைப் பற்றி பெரிதாக கவனம் செலுத்தியதில்லை. நான் அரசில் 25 ஆண்டுகளாக இருக்கிறேன். இவ்வளவு ஆசீர்வாதங்கள் கிடைக்கும்போது, அதற்கே ஒரு நிலையான தாக்கம் உண்டு!” என்று தெரிவித்தார்..

பிரதமர் மோடி, அணியினரின் மனவலிமையும் ஒன்றுபாட்டையும் பாராட்டினார்.. “நீங்கள் அனைவரும் அற்புதமான சாதனை செய்துள்ளீர்கள். இந்தியாவில் கிரிக்கெட் ஒரு விளையாட்டாக மட்டுமல்ல, அது மக்களின் வாழ்வின் ஒரு பகுதி.
கிரிக்கெட் வென்றால் நாடு கொண்டாடும்; தோற்றால் நாடே கவலைப்படும்.” என்று தெரிவித்தார்..

ஒவ்வொருவரின் பங்களிப்பும் வெற்றிக்கு முக்கியம்” என்று அணியின் மூத்த வீராங்கனை ஸ்மிருதி மந்தனா வெற்றியின் பின்னணியில் இருந்த குழு உணர்வை பற்றி கூறினார்.. மேலும் “இந்த தொடர் எங்களுக்கு கற்றுக் கொடுத்த பெரிய விஷயம் —
ஒவ்வொரு வீராங்கனையும் தன் பங்களிப்பை பெருமையாகச் சொல்ல முடியும்.
ஒவ்வொருவரின் முயற்சியும் இந்த வெற்றிக்குப் பின்னால் இருந்தது.

2017-ல் உங்களைச் சந்தித்தபோது, நாங்கள் கோப்பையை கொண்டு வர முடியவில்லை.
ஆனால் நீங்கள் அப்போது எங்களிடம் கூறிய ஊக்கம், கடந்த 6–7 ஆண்டுகளில் எங்களை ஊக்குவித்தது. இந்தியாவில் நடந்த முதல் மகளிர் உலகக்கோப்பையை நாங்கள் வென்றது நமது அதிர்ஷ்டம் என்று நினைக்கிறேன். நீங்கள் எப்போதும் எங்களுக்கு ஒரு ஊக்கம்.. இப்போது பெண்கள் ஒவ்வொரு துறையிலும் ISRO-வில் இருந்தாலும் வேறு துறையிலிருந்தாலும் முன்னேறுகிறார்கள்.
அது எங்களை இன்னும் ஊக்குவிக்கிறது.” என்று கூறினார்.

Read More : உலகக் கோப்பை மகளிர் சாம்பியன்களை சந்தித்த பிரதமர் மோடி!. மன உறுதிக்கு பாராட்டு!. வைரல் கிளிக்ஸ்!.

RUPA

Next Post

2024-ல் உலகிலேயே ராணுவத்திற்கு அதிக செலவு செய்த டாப் 10 நாடுகள்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது?

Thu Nov 6 , 2025
2024 ஆம் ஆண்டில் உலகளவில் ராணுவச் செலவுகள் மிகுந்த அளவில் உயர்ந்துள்ளன. இதற்குக் காரணமாக அரசியல் பதற்றம், பிராந்திய மோதல்கள் மற்றும் அதிகார சமநிலை மாற்றங்கள் குறிப்பிடப்படுகின்றன. இண்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் ஸ்ட்ராடஜிக் ஸ்டடீஸ் (IISS) வெளியிட்ட அறிக்கையின்படி, பல பெரிய நாடுகள் தங்களின் நவீன போர் திறன்களை மேம்படுத்துவதற்காக பாதுகாப்பு நிதியை அதிகரித்துள்ளன. இது தொழில்நுட்ப அடிப்படையிலான ஆயுதங்கள், விண்வெளி மற்றும் சைபர் பாதுகாப்பு, எல்லை பாதுகாப்பு, மற்றும் […]
top 10 military

You May Like