சர்வதேச அளவில் பல கோடிக்கணக்கான இளைஞர்களின் வரவேற்பை பெற்ற அட்டகாசமான கேம் தான் ஜிடிஏ வைஸ் சிட்டி. இந்த கேமின் 5 பாகங்கள் இதுவரை வெளியாகியுள்ள நிலையில், தற்போது அதன் உச்சகட்டமாக 6-வது சீசன் வெளியாகவுள்ளது. இது குறித்த டிரெய்லர் காட்சிகள் சமூக வலைதளங்களில் ராக் ஸ்டார் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இந்த வீடியோ கேம் 90’s கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று.
ஏனெனில், கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்று ஒரு மணி நேரத்திற்கு ரூ.5 முதல் ரூ.10 வரை பணம் கொடுத்து ஜிடிஏ வைஸ் சிட்டி கேம் பலரும் விளையாடி வந்திருந்தனர். காலப்போக்கில் வேலைப்பளு, தொடர் படிப்பு காரணமாக அவை மறைந்திருந்தாலும் தற்போதைய அறிவிப்பு பலருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஆனால், இந்த கேமின் 6-வது பாகம் சிறுவர்களுக்கானது கிடையாது. டிரெய்லரிலேயே அதிக ஆபாச காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், பெற்றோர்கள் இந்த கேமை சிறுவர்கள் விளையாடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.