விஜய் டிவியில் ஒலிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சிரியல் இன்றைய எபிசோட்டில் ரோகிணி தனது அம்மாவிற்கு போன் பண்ணி முத்து சவாரிக்கு போகல என்பதை தெரிந்து கொண்டார். பிளான் போட்டதுப்படியே நடந்து விட்டது என்றும், இன்னைக்கு ஒரு நாள் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம் என்றும் கூறுகின்றார்.
மறுபுறம் வீட்டில் சமையல் வேலையை ஆண்களே செய்கின்றனர். முத்து, மனோஜ், ரவி மற்றும் அண்ணாமலை ஆகியோர் ஒன்றாக அமர்ந்து சாப்பிட இருந்தபோதுதான் அண்ணாமலையின் உறவினர்கள் வந்து கல்யாண பத்திரிகை வைக்கின்றார்கள். அப்போது அங்கிருந்த அண்ணாமலையின் பிள்ளைகளிடம், “உங்க மூன்று பேருக்கும் கல்யாணம் ஆகி ரொம்ப நாள் ஆகிவிட்டது எப்போது உங்க வீட்டில் விசேஷம்?” என்று உறவினர்கள் கேட்கின்றனர்.
அதற்கு அண்ணாமலை எல்லாம் நடக்கும் போது நடக்கும் என்று சொல்கிறார். அதன் பின்பு அவர்களை சாப்பிடுமாறு அண்ணாமலை சொல்ல, மனோஜ் வேண்டாம் என்று தடுக்கின்றார். ஆனாலும் அண்ணாமலை அவர்களைச் சாப்பிட வைத்து அனுப்புகின்றார். அதன் பின்னர் சாப்பாடு இல்லை என மனோஜ் புலம்புகிறான்.
இறுதியில், சிந்தாமணியின் மகளோடு சத்யா காபி குடிக்கின்றார். அப்போது சத்யா தன்னுடைய ஃபேமிலி பேக்ரவுண்ட் பத்தி சொல்லுகின்றார். அதேபோல, சிந்தாமணியின் மகள் தன்னுடைய அம்மா, அப்பா பிரிந்த கதையை சொல்ல முனைய, சத்யா அதை வேண்டாம் என்று சொல்லுகின்றார். இதனால், சிந்தாமணியின் மகள் சத்யா மீது இம்ப்ரஸ் ஆகின்றார்.
அடுத்த எபிசோடில் பாண்டிச்சேரி சென்ற பெண்கள் என்ன செய்கிறார்கள்? செல்வம் ரோகிணி பற்றிய உண்மைகளை தெரிந்து கொள்வாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அடுத்தடுத்த எபிசோட்டில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.



