உங்க குடும்பம் எங்கே சார்..? அவர்களை ஏன் நடுத்தெருவில் கைவிட்டீர்கள்..? முதல்வர் விஜய்க்கு திமுக ஐடி விங் பதிலடி..!

vijay dmk it wing

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு முதல்வர் விஜய் இன்று பதிலுரை ஆற்றினார்.. அப்போது மின் வெட்டு, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கும் முதல்வர் பதில் வழங்கினார்.. எனினும் முதல்வர் விஜய் பேசிக்கொண்டிருக்கும் போதே திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்..


அதன்பின்னர் தனது உரையை தொடர்ந்த முதல்வர் விஜய் குட்டிக் கதை சொல்கிறேன் என்று சொன்னார்.. “ வெயிலில் நின்றபடி எதையோ தேடி கொண்டிருந்த ஒரு வயதான நபரிடம் ஒரு சிறுவன் என்ன தேடுகிறீர்கள் என்று கேட்க “ உங்க அப்பா இங்க தான் இருப்பாருன்னு சொன்னாங்க.. அதான் தேடிகிட்டு இருக்கேன்.. எங்க உங்க அப்பாவையே காணோம்..” என்று சொன்னாராம்.. எங்களுக்கும் இதே போல் நக்கல், நையாண்டியாக, சம்மந்தம் சம்மந்தம் இல்லாத குட்டிக்கதை எல்லாம் பேச தெரியும்..” என்று கூறினார்.. முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் தோல்வியை மறைமுகமாக குறிப்பிட்டே, முதல்வர் விஜய் நக்கலாக விமர்சித்துள்ளார்..

இந்த நிலையில் முதல்வரின் இந்த விமர்சனத்திற்கு திமுக ஐடி விங் பதிலடி கொடுத்துள்ளது.. இதுகுறித்து திமுக ஐடி விங் தனது எக்ஸ் பக்கத்தில் “ சட்டமன்றம் என்பது மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைப் விவாதிக்கும் மாண்புமிகுந்த இடம். அங்கே மிக மலிவாக, சட்டமன்றத்தின் கண்ணியத்தையே குழிதோண்டிப் புதைத்திருகிறார் இந்த ‘இன்ஸ்டா அரசன்’! எதிர்க்கட்சிகளை நக்கல் செய்கிறேன் பேர்வழி என அடுத்தவர் அப்பாவைத் தேடும் C.M சார், நாங்க நேரடியாகவே உங்களுக்கும் உங்க Virtual Abusersக்கும் புரியும் மொழியிலேயே கேட்கிறோம்,

உங்க குடும்பம் எங்கே சார்? அவர்களை ஏன் இப்படி நடுத்தெருவில் கைவிட்டீர்கள்? உங்கள் சொந்தப் பிள்ளைகளின் நண்பர்கள் இன்று, “உங்க அப்பா எங்கடா?” என்று கேட்டால், அந்தப் பிள்ளைகள் என்ன பதில் சொல்வார்கள் என உங்களுக்கு என்றாவது உறைத்திருக்கிறதா?

உங்களது சொந்த மனைவியே, “என் கணவன் இன்னொரு நடிகையோடு தொடர்பில் இருக்கிறார்” என்று கூறி நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்கும் அளவுக்குக் கேவலமான நிலையில் உங்களது தனிமனித வாழ்க்கை இருக்கிறதே, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?

இப்படிப்பட்ட அசிங்கமான பின்னணியை வைத்துக் கொண்டு, எந்த முகத்தோடு சட்டமன்றத்தில் நின்று அடுத்தவர்கள் குடும்பத்தைப் பற்றிக் குட்டிக்கதை சொல்கிறீர்கள்?

மேடைக்கு மேடை ‘தனிமனித ஒழுக்கம்’ என்று ஊருக்கு உபதேசம் செய்யும் ‘சோஃபா மாடல்’ முதலமைச்சரே, முதலில் உங்களது சொந்தக் குடும்பத்தின் வண்டவாளங்களைச் சரிசெய்துவிட்டு, அப்புறம் சட்டமன்றத்தில் வந்து வாய் கிழியப் பேசுங்கள்!” என்று தெரிவித்துள்ளது..

Read More : கத்தார் தீ விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்கள் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்.. முதல்வர் விஜய் அறிவிப்பு..!

RUPA

Next Post

தூக்கி எறியப்படும் பலாக்கொட்டைகளில் இவ்வளவு சத்துக்கள் உள்ளதா..? ஆச்சர்யமூட்டும் தகவல்கள்..!

Tue Jun 23 , 2026
பலாப்பழம் அதன் சுவை மற்றும் சத்துக்களுக்குப் பெயர் பெற்றது. இருப்பினும், பலர் பழத்தைச் சாப்பிட்ட பிறகு அதன் விதைகளை பயனற்றவை எனக் கருதி தூக்கி எறிந்துவிடுகிறார்கள். வெகு சிலரே அவற்றை சமையலில் பயன்படுத்துகின்றனர். ஆனால் சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, பலாப்பழ விதைகளும் பழத்தைப் போலவே அதிக சத்துக்கள் நிறைந்தவை. நார்ச்சத்து, புரதம், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இந்த விதைகள் ஒரு இயற்கையான ‘சூப்பர் ஃபுட்’ (superfood) ஆகக் […]
jackfruit seeds 1 1

You May Like