இந்திய தேர்தல் ஆணையத்தின் SIR என்று அழைக்கப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணியை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.. இதனை பண மதிப்பிழப்பு நடவடிக்கை உடன் ஒப்பிட்ட அவர் SIR என்பது வாக்கு மதிப்பிழப்பு நடவடிக்கை என்று தெரிவித்தார்.
சிலிகுரியில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, தேர்தலுக்கு முன்பே SIR நடத்த வேண்டிய அவசியம் என்று என்று கேள்வி எழுப்பினார்.. மேலும் தேர்தல் ஆணையம் உடனடியாக இந்த நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர் “ இதை ‘சூப்பர் எமர்ஜென்சி’ என்று கூறிய மம்தா,, SIR-ஐ விமர்சித்ததற்காக பாரதிய ஜனதா கட்சி (BJP) என்னை சிறையில் அடைக்கலாம் அல்லது எனது தொண்டையை அறுக்க முடியும், ஆனால் அது மக்களின் வாக்களிக்கும் உரிமைகளைப் பறிக்கக்கூடாது..
பாஜக தலைமையிலான மத்திய அரசு SIR என்ற பெயரில் மக்களை பீதி படுத்துகிறது.தேர்தலுக்கு முன் SIR நடத்த வேண்டியது ஏன் என்று புரியவில்லை. தேர்தல் ஆணையம் உடனடியாக இந்த நடவடிக்கையை நிறுத்த வேண்டும். வாக்காளர் பட்டியலை 2 -3 மாதத்தில் திருத்த முடியாது. இது வலியுறுத்தி மேற்கொள்ளப்படுகிறது” என்றார்.
கடந்த வாரம், SIR நடவடிக்கை 9 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் தொடங்கியுள்ளது. தேர்தல் ஆணையம் முதற்கட்ட பட்டியலை டிசம்பர் 9-ம் தேதி வெளியிடும் என்றும், இறுதி வாக்காளர் பட்டியலை பிப்ரவரி 7-ம் தேதி வெளியிடும் என்றும் அறிவித்துள்ளது.
இரண்டாவது கட்ட SIR நடவடிக்கை நடத்தப்படும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்: அந்தமான் நிக்கோபார் தீவுகள், இலட்சத்தீவு, சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, மத்திய பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம்.
இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் 2026-ல் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன.. அசாம் மாநிலத்தில் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், குடியுரிமையை சரிபார்ப்பதற்காக சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் தனி சீர்மாற்ற நடவடிக்கை நடைபெற்று வருகிறது.
இந்த SIR- முதல் கட்டம் பிஹாரில் நடந்தது.. இந்த பணியில் சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.. அப்போது 7.42 கோடி பேர் பெயர்கள் உள்ள இறுதி வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 30-ல் வெளியிடப்பட்டது
தமிழ்நாட்டிலும் SIR பணிகள் நடந்து வரும் நிலையில் திமுக அரசு இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்த்துள்ளது.. SIRக்கு எதிராக அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டம் கூட்டப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் SIRக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : பயங்கரவாத வழக்கு.. பெண் மருத்துவர் கைது! அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்..!



