ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நிலை குறித்து மீண்டும் ஊகங்கள் கிளம்பியுள்ளன. சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ள ஒரு புகைப்படத்தில், அவரது கை வீக்கத்துடன் காணப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன..
கடந்த வாரம் எடுத்ததாக கூறப்படும் வீடியோவில், 73 வயதான புடினின் வலது கை சுருக்கங்களுடனும் வீங்கிய நரம்புகளுடனும் தென்பட்டது. அவர் அசௌகரியமாக தோன்றியதுடன், 22 வயதான யேகதெரினா லெஷ்சின்ஸ்கயா (Russian Healthy Fatherland இயக்கத் தலைவர்) சந்திக்கும் போது தன் கைகளை முட்டிவைத்து இறுக்கமாக பிடித்துக் கொண்டிருந்தார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெள்யிட்டுள்ளன..
உக்ரைன் உள்துறை அமைச்சகத்தின் முன்னாள் ஆலோசகர் ஆன்டன் கெராஷ்சென்கோ அந்த வீடியோவை X தளத்தில் பகிர்ந்து, “இந்த வீடியோவில் புடின் கைகளுக்கு என்ன ஆனது?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
புதின் நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா?
விளாடிமிர் புடின் நரம்பியல் (neurological) அல்லது ரத்த ஓட்ட (circulatory) கோளாறு ஒன்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற ஊகங்கள் பரவலாக எழுந்துள்ளன. சில சமூக ஊடக பயனர்கள், அவரின் அறிகுறிகளை பார்கின்சன் நோயுடன் (Parkinson’s disease) ஒப்பிடுகின்றனர்.
கையில் நரம்புகள் வீங்குவதற்கான காரணம் என்ன?
மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, கைகள் அல்லது புயங்களில் நரம்புகள் தெளிவாக வீங்குவது பெரும்பாலும் அழகியல் (cosmetic) பிரச்சனை மட்டுமே ஆகும்; பெரிதாக மருத்துவ ரீதியான பிரச்சனையாகாது. அவற்றின் தோற்றத்தை குறைக்க சிலர் அந்த நரம்புகளை மூடுதல் அல்லது அகற்றுதல் போன்ற சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்.
கையில் நரம்புகள் வீங்குவதற்கான காரணங்கள் — மருத்துவர்கள் விளக்கம்
மருத்துவர்களின் கூற்றுப்படி, வயது அதிகரித்துவரும் போது கையில் நரம்புகள் தெளிவாக காணப்படுவது இயல்பானது. பொதுவாக இது ஒரு மருத்துவப் பிரச்சனை அல்ல, மேலும் சிகிச்சை தேவைப்படுவதில்லை. எனினும், சில நேரங்களில் வலி அல்லது பலவீனம் போன்ற அறிகுறிகள் இருந்தால், அதற்கு அடிப்படை சுகாதாரப் பிரச்சனை காரணமாக இருக்கலாம்.
கையில் நரம்புகள் தெளிவாகப் படுவதற்கான சில முக்கிய காரணங்கள்:
குறைந்த உடல் கொழுப்பு (Low body fat)
கைகளில் கொழுப்பு திசுக்கள் குறைவாக இருந்தால், நரம்புகள் மேலும் தெளிவாகக் காணப்படும்.
வயது (Age)
வயதுடன் தோல் மெல்லியதாகி, அதன் நெகிழ்ச்சி (elasticity) குறைகிறது. இதனால் நரம்புகள் வெளிப்படையாகத் தோன்றும். மேலும், நரம்புகளில் உள்ள வால்வுகள் பலவீனப்படலாம்.
மரபு (Genetics)
உங்கள் குடும்ப உறுப்பினர்களில் இதே பிரச்சனை இருந்தால், உங்களுக்கும் அதேபோல் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
சூடான வானிலை (Hot weather)
அதிக வெப்பநிலை நரம்பு வால்வுகள் சரியாக செயல்படுவதில் சிரமம் உண்டாக்கும். இதனால் நரம்புகள் தற்காலிகமாக பெரிதாக தோன்றலாம்.
உடற்பயிற்சி (Exercise)
அடிக்கடி தீவிரமான உடற்பயிற்சிகள் செய்வது நரம்புகள் வெளிப்படையாகத் தோன்ற வழிவகுக்கும்.
வெரிகோஸ் வீன்ஸ் (Varicose veins)
பெரும்பாலும் கால்களில் காணப்படும் இந்த பிரச்சனை, நரம்பு வால்வுகள் பலவீனமாவதால் இரத்த ஓட்டம் பின்னோக்கி செல்லும் நிலையை உருவாக்குகிறது. இதனால் நரம்புகள் சுருண்டு, பெரிதாகவும், சில நேரங்களில் வலியுடனும் இருக்கும்.
பிளெபைட்டிஸ் (Phlebitis)
சில நேரங்களில் தன்னியக்க நோய் (autoimmune disease) அல்லது IV காத்தெட்டர் (intravenous catheter) மூலம் ஏற்படும் தொற்றால் நரம்பு வீக்கம் அல்லது அழற்சி ஏற்படலாம். இதை பிளெபைட்டிஸ் என்று அழைக்கப்படுகிறது.
மருத்துவர்களின் பரிந்துரை:
பொதுவாக கையில் நரம்புகள் வீங்குவது பெரும்பாலானவர்களுக்கு ஆபத்தானது அல்ல. எனினும், இது தீவிரமான பிரச்சனையின் அறிகுறி என்று நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள் என்றால், மருத்துவரை அணுகி பரிசோதனை செய்வது அவசியம்.
அதேபோல், அழகியல் காரணங்களுக்காக (cosmetic reasons) நரம்புகள் நீக்கப்பட வேண்டுமெனில், மருத்துவர் அதற்கான சிறப்பு நிபுணரை (specialist) பரிந்துரைக்க முடியும்.
Read More : 12 பேர் பலி.. 24 பேர் காயம்.. பாகிஸ்தானில் நீதிமன்றத்திற்கு வெளியே வெடித்து சிதறிய கார்..!



