இஸ்ரேல் – அமெரிக்கா மற்றும் ஈரான் போர் காரணமாக இந்தியாவில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இதனை சமாளிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.. இந்த நிலையில் இன்று எல்பிஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..
இந்தியன் ஆயில் நிறுவனம் எல்பிஜி லாரி உரிமையாளர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு மேலாக வாடகை வழங்காத நிலையில் இந்த வாடகை பாக்கி ரூ.50 கோடி வரை செண்றுள்ளது.. எனவே வாடகை பாக்கி வழங்காததை கண்டித்து, எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் 3500க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் கேஸ் டேங்கர் லாரிகளை இயக்கி வரும் நிலையில் இந்த போராட்டம் காரணமாக லாரிகள் லோடு ஏற்றாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்படும் நிலை உருவானது..
இந்த போராட்டம் நீடித்தால் வீட்டு சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தர்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்..
இந்த நிலையில் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ் பெறப்பட்டுள்ளது.. தென் மண்டல டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தர்ராஜன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. முதல் தவணையாக ரூ.45 கோடியை இந்தியன் ஆயில் நிறுவனம் வழங்கியதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.. இதனால் சிலிண்டர் தட்டுப்பாடு எதுவும் ஏற்படாது என்பதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்..
Read More : ஏசி வாங்கி தராத விரக்தியில் தனி அறையில் தூங்கிய மனைவி.. காலையில் எந்த கணவனும் பார்க்க கூடாத கோலம்..!



