Holiday: 2026-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை…! முழு பட்டியல் இதோ…!

Tn Govt 2025

2026-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து அலுவலகங்களும் 2026-ம் ஆண்டின் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் மூடப்பட வேண்டும். இதுதவிர, தமிழகத்தில் பொது விடுமுறை நாட்களின் விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.


அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வரும் ஆண்டில் புத்தாண்டு, பொங்கல், குடியரசு தினம், தைப்பூசம், ரம்ஜான், புனித வெள்ளி, சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட முக்கியப் பண்டிகைகள் உட்பட மொத்தம் 24 நாட்களுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

01.01.2026 புத்தாண்டு, 15.01.2026 பொங்கல், 16.01.2026 திருவள்ளுவர் தினம், 17.01.2026 உழவர் திருநாள், 26.01.2026 குடியரசு தினம், 01.02.2026 தைப்பூசம், 19.03.2026 தெலுங்கு புத்தாண்டு தினம் , 21.03.2026 ரம்ஜான், 31.03.2026 மகாவீர் ஜெயந்தி , 01.04.2026 வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கான வருடாந்திர கணக்குகள் மூடல், 03.04.2026 புனித வெள்ளி, 14.04.2026 தமிழ் புத்தாண்டு தினம்/டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்தநாள்,

மேலும் 01.05.2026 மே தினம் அன்று பொது விடுமுறை, 28.05.2026 பக்ரீத், 26.06.2026 முஹர்ரம், 15.08.2026 சுதந்திர தினம், 26.08.2026 நபி (நபி பிறந்தநாள்),04.09.2026 கிருஷ்ண ஜெயந்தி, 14.09.2026 விநாயகர் சதுர்த்தி, 02.10.2026 காந்தி ஜெயந்தி, 19.10.2026 ஆயுத பூஜை, 20.10.2026 விஜய தசமி, 08.11.2026 தீபாவளி, 25.12.2026 கிறிஸ்துமஸ், இதில், 01.04.2026 அன்று குறிப்பிடப்பட்டுள்ள விடுமுறை, தமிழ்நாட்டில் உள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

நடுவானில் பயங்கரம்!. ராணுவ விமானம் தீப்பிடித்து விபத்து!. 20 பேர் பலி!. பகீர் வீடியோ!

Wed Nov 12 , 2025
ஜார்ஜியா-அஜர்பைஜான் எல்லைக்கு அருகே நடுவானில் சென்றுக்கொண்டிருந்த துருக்கி விமானப்படையின் C-130 ஹெர்குலஸ் (TUAF543) விமானம் திடீரென தீபிடித்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பரிதாபமாக பலியாகினர். அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. அஜர்பைஜான் எல்லையிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் (3 மைல்) தொலைவில் உள்ள ஜார்ஜியாவின் ககேட்டி பகுதியில் C-130 போக்குவரத்து விமானம் விழுந்து நொறுங்கியதாக துருக்கிய தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது . ஜார்ஜிய சிக்னாகி நகராட்சிக்கு அருகிலுள்ள மலைப்பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. […]
turkey flight crash 1

You May Like