இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தற்போது நடைமுறையில் உள்ள தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்களுக்கு இடையேயான ஒழுங்குமுறை நெறிமுறைகள் குறித்த மதிப்பீடுகள் என்ற தலைப்பில் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையச் சட்டம் 1997 பிரிவு 11 (1) (பி) பிரிவின்படி, தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்களுக்கிடையேயான தொடர்புகள் குறித்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை விதிப்பதற்கு அதிகாரம் அளிக்கிறது.இதன்படி, டிராய் இதுகுறித்த விரிவான ஆய்வை மேற்கொண்டு அனைத்து 9 விதிமுறைகள் குறித்து மதிப்பீடு செய்தது. மாறிவரும் தொலைத்தொடர்பு துறையின் தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்களை மதிப்பீடு செய்வதன் மூலம், அதற்கான ஒழுங்குமுறை விதிகளை மாற்றியமைக்க உதவுகிறது.
இதன்மூலம் தொலைத்தொடர்புத் துறையில் விரிவான ஒழுங்குமுறை விதிகளை உருவாக்குவதற்கு வழிவகுக்கும்.தொலைத்தொடர்புத் துறையின் எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் வகையில் நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய தயார் நிலையை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது.கடந்த 20 ஆண்டுகளில் ஒருங்கிணைப்பு ஒப்பந்த விதிமுறைகளுக்கான பதிவுகளின் அடிப்படையில், விதிமுறைகளை உருவாக்குவதற்கான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



