fbpx

13 முதல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மட்டும்…! தமிழக அரசு அட்டகாசமான அறிவிப்பு…!

தமிழ்நாடு சமூக நலத்துறையின் சார்பில், பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பங்காற்றும் 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு 2023-24 ஆம் ஆண்டுக்கான தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24ல் மாநில அரசின் விருதுக்கான காசோலை ரூ.1,00,000/- மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்பட உள்ளது.

மேற்படி, விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான/தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள். கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ, விழிப்புணர்வை ஏற்படுத்தியிருத்தல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் போன்ற அம்சங்களில் வீர தீர செயல் புரிந்திருக்க வேண்டும்.

மேற்காணும் விருதினை பெற குழந்தையின் பெயர், தாய்/தந்தை முகவரி, ஆதார் எண், புகைப்படம் ஆகியவற்றுடன் குழந்தை ஆற்றிய அசாதாரண வீர தீர செயல் மற்றும் சாதனைகள் ஆகியவற்றின் ஒரு பக்கத்திற்கு மிகாத குறிப்பு மற்றும் அதற்கான ஆதாரங்கள் இணைத்து உரிய முன்மொழிவுகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து, 16.12.2023 முதல் 31.12.2023 வரை (https://awards.tn.gov.in) στσότη இணையதளத்தில் விண்ணப்பித்த பின்னர். விண்ணப்பதாரர்கள் மாவட்ட சமூக நல அலுவலகம் வாயிலாகவும் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

Vignesh

Next Post

செக்...! ரேஷன் பொருட்கள் விற்றால் கைது நடவடிக்கை...! தமிழக அரசு அதிரடி...

Sat Dec 16 , 2023
அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டம் / சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது. அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். உணவுப் பொருள் வழங்கல் மற்றும் […]

You May Like