2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நான்கு முனைப் போட்டியாக இருக்கப் போகிறது என்பது தான் தற்போதைய கள நிலவரம். மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட விஜய் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில் இந்த தேர்தல் முக்கியதுவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தனது முதல் மாநாட்டிலே பாஜக மற்றும் திமுக உடன் கூட்டணி இல்லை என்றும், தவெக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றும் திட்டவட்டமாக அறிவித்த்தார்.
இதற்கிடையே ’தி.மு.க கூட்டணிக்கு அரணாக இருக்கிறேன்’ எனக் கூறிவரும் நாஞ்சில் சம்பத், மறுபக்கம் தி.மு.க அரசைச் சாடும் விஜய்யை பாராட்டுவதோடு, அவரது அரசியல் வருகை தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் பேசிவருகிறார். அவரது இந்த நிலைப்பாடு தி.மு.க. தலைமைக்குப் பிடிக்காததால், அவரை அக்கட்சியில் இருந்து நீக்குவது குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
திமுகவுக்கு தமிழக வெற்றிக்கழகம் கட்சிதான் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என கூறியதால் நாஞ்சில் சம்பத்தை அறிவு திறன் பேச்சு பயிற்சியில் இருந்து திமுக நீக்கி உள்ளது. இது குறித்து பேட்டியளித்த அவர், அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. தம்பி விஜய் தமிழக வெற்றிக்கழக ஆரம்பித்து போர் யானைகள், வாகை மலரை கொடியில் கொண்டு வந்தது என அனைத்தும் தமிழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக உள்ளது என கூறியுள்ளார்.
அவரது இந்த பேச்சு திமுக கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அவர் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஒரு பேட்டியில் ‘விஜய் கேட்டால் அரசியல் ஆலோசனை வழங்குவேன்’ என நாஞ்சில் சம்பத் கூறியது குறிப்பிடத்தக்கது.
Read more: சுகன்யா சம்ரிதி யோஜனா முதல் NSC வரை.. இரட்டிப்பு லாபம் தரும் தபால் அலுவலக திட்டங்கள்..!



