தமிழகத்தில் இதுவரை 5,00,67,045 SIR படிவங்கள் விநியோகம்…! தேர்தல் ஆணையம் அப்டேட்…!

voter id aadhar link 11zon

12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்த தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.


வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபார், சத்தீஷ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்தியப்பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2025 நவம்பர் 4 அன்று தொடங்கி டிசம்பர் 4 வரை நடைபெறுகிறது.

2025 அக்டோபர் 27-ன்படி, இம்மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 50,99,72,687 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 50,69,73,675 கணக்கெடுப்பு படிவங்கள் (99.41%) அச்சிடப்பட்டு 37,05,68,109 கணக்கெடுப்பு படிவங்கள் இதுவரை (2025 நவம்பர் 12) விநியோகிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்காக 5,33,093 வாக்குச் சாவடி அலுவலர்கள், 7,64,419 முகவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 6,41,14,582 கணக்கெடுப்பு படிவங்கள் அச்சிடப்பட்டு 5,00,67,045 படிவங்கள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 68,467 வாக்குச் சாவடி அலுவலர்களும் 2,11,445 வாக்குச்சாவடி முகவர்களும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அதிக வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்குமாறு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மலச்சிக்கல் பிரச்சனையா..? கிவி பழம் சாப்பிடுவதால் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் கிடைக்குமா..?

Thu Nov 13 , 2025
ஆரோக்கியம் கெட்டுப் போவதற்குக் காரணமாக அமையும் பல காரணிகளில், நாள்பட்ட மலச்சிக்கல் ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. நார்ச்சத்து இல்லாத உணவுகள், போதிய நீர் அருந்தாமை மற்றும் சிரமப்பட்டு மலம் கழித்தல் போன்ற பழக்கங்களே இதற்கு முக்கியக் காரணங்கள் ஆகும். இந்தப் பிரச்சனைக்கு முறையான சிகிச்சை எடுக்காவிட்டால் மூல நோய், மலக்குடல் இறக்கம் போன்ற கோளாறுகள் உருவாக வாய்ப்புள்ளது. மலச்சிக்கலுக்கான தீர்வுகளை ஆராய்ந்த பிரிட்டிஷ் டயடெட்டிக் அஸோஸியேஷனைச் (BDA) சேர்ந்த […]
Kiwi fruit

You May Like