“இன்னும் 5 மாதங்கள் தான் முதல்வரே.. தமிழகம் இனி பொறுத்துகொள்ளாது..” வீடியோ வெளியிட்டு அண்ணாமலை கண்டனம்..”

tn cm stalin annamalai

தமிழ்நாட்டில் தற்போது திமுக ஆட்சி நடந்து வருகிறது. ஒருபுறம் திராவிட மாடல் ஆட்சி மக்களுக்கான ஆட்சியாக செயல்படுவதாக திமுகவினர் கூறி வருகின்றனர்.. ஆனால் மறுபுறம் திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.. கொலை, கொள்ளை, திருட்டு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.. இதுறித்து திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறிவருகின்றனர்..


அந்த வகையில் தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசு மீது தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்.. இந்த நிலையில் சென்னையில் பாஜக நிர்வாகி மணிகண்டன் திமுக நிர்வாகி ஆறுமகத்தால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.. தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்..

தனது பதிவில் “ இது என்ன மாதிரியான ரவுடித்தனம் திரு. ஸ்டாலின் அவர்களே..? தமிழக பாஜக நிர்வாகி திரு மணிகண்டன் ஏ.வி.எல், அரசு நிலத்தை அபகரிக்கும் ஆறுமுகத்தின் திட்டம் குறித்து காவல்துறையினருக்குத் தெரிவிக்க முயன்றதால், திமுக நிர்வாகி ஆறுமுகத்தால் அவரது சொந்த வீட்டிற்கு வெளியே கொடூரமாகத் தாக்கப்பட்டார்.

இன்னும் 5 மாதங்கள் திரு ஸ்டாலின் அவர்களே.. இன்னும் 5 மாதங்கள் மட்டுமே! ஆட்சி என்ற போர்வையில் மிரட்டல், ஊழல் மற்றும் வன்முறையை தமிழகம் இனி பொறுத்துக்கொள்ளாது.” என்று பதிவிட்டுள்ளார்.. மேலும் இந்த தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் அவர் பகிர்ந்துள்ளார்..

RUPA

Next Post

பீகார் படுதோல்வி.. அரசியலில் இருந்து விலகுவதாக லாலு மகள் ரோகிணி அறிவிப்பு..!

Sat Nov 15 , 2025
2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி படுதோல்வியை சந்தித்த நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தள (ஆர்ஜேடி) கட்சியின் தலைவரான லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா அரசியலை விட்டு விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள “நான் அரசியலை விட்டு வெளியேறுகிறேன், என் குடும்பத்தை நான் துறக்கிறேன்… இதைத்தான் சஞ்சய் யாதவும் ரமீஸ்வும் என்னிடம் கேட்டார்கள் … மேலும் நான் எல்லா பழிகளையும் […]
tejashwi yadav and rohini acharya 1763201157 2 1

You May Like