fbpx

உங்களை சுற்றி பொறாமை பிடிச்சவங்களா இருக்காங்களா.? கட்டாயம் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்.!

உலகமானது நேர்மறை மற்றும் எதிர்மறை சிந்தனைகளாலும் ஆற்றலாலும் சூழபட்டிருக்கிறது. பொறாமை என்பது மனித குளத்தின் இயல்பிலேயே இருக்கக்கூடிய ஒரு தீய எண்ணம் ஆகும். கண் திருஷ்டிகளும் பொறாமையின் ஒரு பகுதி தான் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தக் கண் திருஷ்டி பொறாமை மற்றும் எதிர்மறை சிந்தனைகளில் இருந்து நம்மை காத்துக் கொள்வது நமது முன்னேற்றத்திற்கும் அமைதியான வாழ்விற்கும் வழிவகுக்கும். இதுபோன்ற கெட்ட எண்ணங்கள் மற்றும் பார்வைகளில் இருந்து உன்னை காத்துக் கொள்வதற்கு சில எளிய வழிகள் சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அவை என்ன.? என்று இந்த பதிவில் பார்ப்போம்.

நமக்கு பிடிக்காத நபரை சந்திக்க நேர்ந்தால் வீட்டிற்கு வந்தவுடன் கைகளில் உப்பை தேய்த்து தண்ணீரில் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அந்த நபரிடமிருக்கும் கெட்ட எண்ணங்கள் மற்றும் எதிர்மறை சிந்தனைகளும் நம் மீது தாக்கத்தை ஏற்படுத்தாமல் அழிந்து விடும். மேலும் அந்த நபரின் கண் திருஷ்டி மற்றும் பொறாமையில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு மூன்று கிராம்பை எப்போதும் கைகளில் அல்லது கைப்பைகளில் வைத்திருக்க வேண்டும். தேவையில்லாத நபர்கள் மற்றும் எதிர்மறை சிந்தனை கொண்ட நபர்களிடமிருந்து நமக்கு வர இருக்கும் எதிர்மறை எண்ணங்களையும் தீய சக்திகளையும் தடுக்கின்ற சக்தி கிராம்பிற்கு இருக்கிறது.

மேலும் பிரிஞ்சி இலையை வீட்டில் எரிப்பதன் மூலம் பண வரவு மற்றும் வெற்றி தேடி வரும் என மாந்திரீகங்கள் தெரிவிக்கின்றன. அந்த இலையின் நறுமணத்திற்கும் அவற்றின் புகைக்கும் வீட்டில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் நீங்கி செல்வ வளம் பெருகுவதோடு வெற்றியும் குடிகொள்ளும் என்று மாந்திரீக தந்திரங்களில் இருப்பதாக அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இது போன்ற சிறிய விஷயங்களை பின்பற்றுவதன் மூலம் எதிர்மறை சிந்தனைகள் மற்றும் பொறாமையில் இருந்து நம்மை காத்துக் கொள்வதோடு வெற்றி மற்றும் செல்வ வளத்தோடு இருக்கலாம்.

Next Post

சிறுநீரை அடக்க சிரமப்படுகிறீர்களா.? அது எந்த நோயின் அறிகுறி.? அவற்றின் தீர்வு என்ன.?

Wed Dec 20 , 2023
சிறுநீர் செயல்பாடு உடலில் அத்தியாவசியமான ஒன்றாகும். இதன் மூலம் உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. குளிர்காலங்களில் பொதுவாக அனைவருக்கும் சிறுநீர் அடிக்கடி கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். ஆனாலும் சிறுநீரை அடக்க முடியாத பிரச்சனை இருப்பவர்களுக்கு குளிர்காலங்களில் இது மிகப்பெரிய அவதியை ஏற்படுத்தும். அவர்களுக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டு விட்டால் அதனை கட்டுப்படுத்த சிரமப்படுவார்கள். இந்த சிறுநீர் அடக்க முடியாத நிலை ஏன் ஏற்படுகிறது. […]

You May Like