தன் கட்சி காமுகர்களை ஒடுக்க முடியாத முதல்வர், தமிழகத்தை எப்படி பாதுகாக்கப் போகிறார்? இபிஎஸ் கேள்வி!

MK Stalin eps

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.. அந்த வகையில் விழுப்புரத்தில் திமுக ஒன்றிய செயலாளர் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்..


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ விழுப்புரம் அருகே திமுக ஒன்றியச் செயலாளர், பெண் ஒருவரை 6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. “காவல்துறையால் என்னை ஒன்றும் செய்ய முடியாது; நான் முக்கிய புள்ளி” எனக் கூறி, தனது திமுக பதவியை வைத்து கொண்டு இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. திமுக ஆட்சியில், திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலைக்கு என்ன பதில் வைத்துள்ளார் பொம்மை முதல்வர்?

அமைச்சருக்கு நெருக்கமான அனுதாபி முதல், பதவியை வைத்து கொண்டு கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ள ஒன்றியச் செயலாளர் வரை, இந்த திமுக பாலியல் SIR-களைக் கூட கட்டுப்படுத்த கையாலாகாத தலைவராக தான் இந்த பொம்மை முதல்வர் இருக்கிறார். தன் கட்சி காமுகர்களை ஒடுக்க முடியாத இந்த பொம்மை முதல்வர், நம் தமிழகத்தை எப்படி பாதுகாக்கப் போகிறார்? உடனடியாக திமுக ஒன்றியச் செயலாளர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்..

Read More : Flash : காஞ்சிபுரத்தில் நாளை விஜய் நிகழ்ச்சி.. 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி.. தவெக அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

RUPA

Next Post

கனடா - டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணி மாரடைப்பால் உயிரிழப்பு..

Sat Nov 22 , 2025
கனடாவின் வான்கூவர் நகரிலிருந்து கொல்கத்தா வழியாக டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த டெல்லியைச் சேர்ந்த 70 வயதான தல்வீர் சிங், வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) மார்புவலி மற்றும் உடல் அசௌகரியம் ஏற்பட்டதாக புகார் செய்தார். மருத்துவ அவசரநிலையால், விமானம் கொல்கத்தா விமான நிலையத்தில் இரவு 9:15 மணிக்கு அவசர இறக்கத்தை செய்தது. தல்வீர் சிங் விமானத்திலிருந்து இறக்கப்பட்டபின், மீதமுள்ள 176 பயணிகளுடன் விமானம் இரவு 10:10 மணிக்கு […]
WhatsApp Image 2025 07 04 at 11.49.25 PM

You May Like