fbpx

அடடே கர்ப்பிணி முதல் கேன்சர் மற்றும் இதய நோய்களை விரட்டும் சௌசௌ காய்.! ஆச்சரியமான பலன்கள்.!

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் சௌசௌ காயில் புரதச்சத்து, சோடியம், பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம், வைட்டமின் சி, வைட்டமின் பி6 மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. இவற்றை தினமும் நம் உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. மேலும் இந்தக் காயில் போலேட் மாங்கனிசு மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்களும் உள்ளன. இவற்றில் இருக்கக்கூடிய வைட்டமின் சி, மைரிஸ்ட்டின் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நம் உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கிறது.

இவற்றில் இருக்கக்கூடிய பல்வேறு மூலக்கூறுகள் மற்றும் நார்ச்சத்துக்கள் இதய ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை ரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதோடு ரத்த அழுத்தத்தை குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. சௌசௌ காயில் குறைந்த அளவில் கார்போஹைட்ரேட்டுகளும் அதிக அளவில் நார்ச்சத்துக்களும் நிறைந்திருக்கிறது. இதில் இருக்கக்கூடிய நார்ச்சத்துக்கள் ரத்தம் விரைவாக சர்க்கரையை உறிஞ்சுவதை தடுக்கிறது. இதன் மூலம் நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது தடுக்கப்படுகிறது.

சௌசௌ காய் கர்ப்பிணிகளுக்கு சிறந்த உணவாகும். இதில் இருக்கக்கூடிய ஃபோலேட் சத்து வயிற்றில் இருக்கக்கூடிய கருவின் ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது. சௌசௌ காயில் இருக்கும் தாதுக்கள் நம் ஈரலில் சேரும் கெட்ட கொழுப்புகளின் அளவை குறைக்கிறது. மேலும் கொழுப்பு அமிலங்கள் அதிகம் உற்பத்தியாவதையும் தடுக்கிறது. இதனால் ஈரல் ஆரோக்கியம் மேம்பட முக்கிய பங்கு வகிக்கிறது . இந்தக் காயில் கேன்சர் நோய்க்கு எதிராக செயல்படக்கூடிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதாகவும் மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

Next Post

அதிகாரப்பூர்வ அறிவிப்பு...! 10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்...! முழு விவரம்...

Sat Dec 23 , 2023
10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. டிச.27-ம் தேதி முதல் ஜனவரி 10-ம் தேதி வரை தேர்வு கட்டணத்துடன் மேல்நிலை வகுப்புக்கு ரூ.1,000, 10-ம் வகுப்புக்கு ரூ.500 கூடுதலாக செலுத்தி விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு இது குறித்து தேர்வுத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; 27.12.2023 முதல் ஜனவரி 10-ம் தேதி வரை மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு உரிய […]

You May Like