இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் வருகை…! தமிழகம் முழுவதும் இன்று முதல் 26-ம் தேதி வரை SIR கள ஆய்வு.‌‌..!

election 2025

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த செயல்முறை குறித்து இன்று முதல் தமிழ்நாட்டில் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.


2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்த செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகத்திற்கு வருகை தர உள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் ஊடகப் பிரிவைச் சேர்ந்த பி. பவன், துணை இயக்குநர் தேவன்ஷ் திவாரி ஆகியோர் இன்று முதல் 26 வரை சென்னையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கட்டம்-II குறித்த ஊடக ஒருங்கிணைப்பு மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்வார்கள். அதைத் தொடர்ந்து, அவர்கள் கள அளவிலான ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.

கூடுதலாக, இந்திய தேர்தல் ஆணையத்தின் இயக்குனர் கிருஷ்ண குமார் திவாரி, இச்சிறப்பு தீவிர திருத்த செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து, குறிப்பாக மாவட்ட அளவில் சம்பந்தப்பட்ட வாக்கு சாவடி நிலை அலுவலர்கள் மூலம் கணக்கீட்டு படிவங்கள் விநியோகம் மற்றும் அதன் டிஜிட்டல் முறை உள்ளீடு குறித்து மதிப்பாய்வு செய்வதற்காக கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு வருகை தருவார். இதேபோல், செயலர் மதுசூதன் குப்தா சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்குச் சென்று சிறப்பு தீவிர திருத்தம் பற்றி ஆய்வு செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

TNPSC முதல்நிலைத் தேர்வு விடைத்தாள்கள் இணையதளத்தில் பதிவேற்றம்...!

Mon Nov 24 , 2025
கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-6 தேர்வு (ஃபாரஸ்ட் அப்ரண்டீஸ்), குரூப்-2, 2 ஏ முதல்நிலைத் தேர்வு, 2023-ல் நடத்தப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை சாலை ஆய்வாளர் தேர்வு, 2024 குரூப்-1 முதல்நிலைத் தேர்வு விடைத்தாள்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-6 தேர்வு (ஃபாரஸ்ட் அப்ரண்டீஸ்), குரூப்-2, 2 ஏ முதல்நிலைத் தேர்வு, 2023-ல் நடத்தப்பட்ட ஊரக […]
group 2 tnpsc 2025

You May Like