சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் அமுதா இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ வடகிழக்கு பருவமழை இயல்பில் இருந்து 5 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது.. 4 இடங்களில் அதி கனமழை, 76 இடங்களில் கனமழை பதிவாகி இருகிறது..
குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.. இது 24 மணி நேரத்தில் மண்டலமாக வலுப்பெறும்.. அதற்கடுத்த 48 மணி நேரத்தில் புயலாக உருவாகிறது..
சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 29-ம் தேதி மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்படுகிறது.. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கடலூரில் 29-ம் தேதி மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. திருவள்ளூர் மாவட்டத்தில் 30-ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது..
மீனவர்கள் உடனே கரைக்கு திரும்ப வேண்டும் தமிழகம், கேரளா கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.. ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும்.. இதுபோன்ற காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவும் போது தமிழகத்தில் அதிக மழை பெய்யும். குமரி கடல் பகுதியில் உள்ள சுழற்சியால் நமக்கு அதிக மழை கிடைக்க வாய்ப்பு. டிசம்பர் மாதத்திற்கான வானிலை நிலவரம் நவம்பர் 30-ம் தேதி தெரியவரும்.. அன்றைய தினம் டிசம்பர் மாதத்திற்கான வானிலை அறிக்கை வெளியிடப்படும்..” என்று தெரிவித்தார்..



