மே மாத மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000 விரைவில் வரவு வைக்கப்படும்.. முதல்வர் விஜய் அறிவிப்பு..!

vijay 10

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்துள்ளது.. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. எனினும் ஆட்சியமைக்க போதுமான பெரும்பான்மை கிடைக்காததால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு வழங்கியது.


இதை தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு வழங்கியதால் தவெக ஆட்சி அமைத்தது. மேலும் நேற்று சட்டப்பேரவையில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் வெற்றி பெற்றார்.. தவெகவுக்கு ஆதரவாக 144 பேர் வாக்களித்ததால் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு தப்பியது.

தொடர்ந்து முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முக்கியமான நலத்திட்டங்கள் தொடரும் என்று விஜய் அறிவித்திருந்தார். முந்தைய திமுக ஆட்சியில் அரசு பள்ளியில் படித்து, கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வந்தது.. இந்த சூழலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் பணம் வரவு வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், இன்று மாணவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கப்பட்டது..

தொடர்ந்து 15 ஆம் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்தது. இந்த நிலையில் மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் உறுதியளித்தூள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமைத்தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய அவகாசம் தேவைபடுகிறது. மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமை தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்கபடும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

Read more: BREAKING| கேரளாவின் புதிய முதலமைச்சர் V.D. சதீசன்..! காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

English Summary

May Women’s Rights Amount Rs. 1000 will be credited soon.. Chief Minister Vijay’s announcement..!

Next Post

ஸ்லீப்பர் பஸ்ஸுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. தலைநகரில் அதிர்ச்சி..!

Thu May 14 , 2026
Young woman dragged into sleeper bus and gang-raped.. Shock in the capital..!
Rape 2025 6

You May Like