2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட விஜய் போட்டியிட உள்ள நிலையில் இந்த தேர்தல் முக்கியதுவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தனது முதல் மாநாட்டிலே பாஜக மற்றும் திமுக உடன் கூட்டணி இல்லை என்றும், தவெக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றும் திட்டவட்டமாக அறிவித்த்தார். மேலும் தங்களோடு கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கீடும், அதிகாரப் பகிர்வும் கொடுப்போம் என்றும் விஜய் கூறியுள்ளார்.
தவெக தலைவர் விஜய்க்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2018 ஆம் வருடத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட இவர்,எடப்பாடி பழனிசாமியை தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார். 1984-ல் எம்ஜிஆரின் ஆட்சியில் காங்கேயம் தொகுதியில் MLA ஆக இருந்த இவருக்கு இன்றளவும் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கணிசமான செல்வாக்கு உள்ளது. அதனால், அவரை கட்சியில் இணைக்க TVK தரப்பு முயல்வதாக கூறப்படுகிறது.
அதிமுக பாஜக கூட்டணியைப் படுதோல்வி அடையச் செய்ய வேண்டுமானால் அதிமுகவில் எடப்பாடியால் பாதிக்கப்பட்டவர்களும் அதிருப்தியில் இருப்பவர்களும் விஜய்யோடு அணி சேர வேண்டும் என்று, எடப்பாடியால் பதவி பறிக்கப்பட்ட அண்ணாமலை, எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கும் தேமுதிக ஆகியோரும் ஓரணியில் திரள வேண்டும் எனவும் அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி கூறியது குறிப்பிடத்தக்கது.
Read more: அதிமுக மாஜியை தட்டித் தூக்கிய விஜய்..! தவெகவில் இணையும் செங்கோட்டையன்..? பரபரக்கும் அரசியல் களம்..!



