வட எத்தியோப்பியாவில் 12,000 ஆண்டுகளாக அமைதியாக இருந்த ஹெய்லி குப்பி (Hayli Gubbi) எரிமலை ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென வெடித்தததால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். திடீரென மிகப்பெரிய குண்டு வெடிப்பு நிகழ்ந்தது போல் உணர்ந்ததாக அவர்கள் கூறினர்.. இந்த வெடிப்பில் உருவான தடித்த சாம்பல் மேகங்கள் செங்கடல் வழியாக யேமன் மற்றும் ஓமான் நோக்கி பயணம் செய்தன.
எத்தியோப்பியாவின் அஃபார் பகுதியில் உள்ள இந்த எரிமலையின் வெடிப்பால் அருகிலிருந்த அஃஃடேரா (Afdera) கிராமம் முழுவதும் சாம்பலில் மூழ்கியது. “அது ஒரு பெரிய குண்டு வெடித்த மாதிரி இருந்தது.; புகை, சாம்பல் எல்லாம் சுற்றி வந்தது,” என்று அஃபார் பகுதியைச் சேர்ந்த அக்மத் அப்தெல்லா என்ற நபர் தெரிவித்தார்..
மேலும், டனா கில் பாலைவனம் (Danakil Desert) அருகிலுள்ள கிராமம் திங்கட்கிழமையிலும் இன்னும் சாம்பலில் மூழ்கியே இருப்பதாகவும், அந்தப் பாலைவனத்தை நோக்கி சென்ற சுற்றுலா பயணிகள் மற்றும் வழிகாட்டிகள் அங்கு சிக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோக்களில், வெடிப்பு ஏற்பட்ட இடத்திலிருந்து பெரிய அளவிலான வெள்ளை புகை தூண் மேலே எழுவதைக் காண முடிந்தது.
ஸ்மித் சோனியன் இன்ஸ்டிட்யூஷனின் Global Volcanism Program வெளியிட்ட அறிக்கையில், ஹெய்லி குப்பி எரிமலையில் அதாவது கடைசி பனிக்காலம் முடிந்து சுமார் 12,000 ஆண்டுகளாக எந்த வெடிப்பும் பதிவாகியதில்லை என்று தெரிவித்தது..
மிச்சிகன் டெக்னாலஜிக்கல் யுனிவர்சிட்டியின் எரிமலை நிபுணரும் பேராசிரியருமான சைமன் கார்ன் “ஹெய்லி குப்பியில் ஹோலோசீன் காலத்தில் எந்தவித வெடிப்பும் நடந்ததாக பதிவுகள் இல்லை” என்று தெரிவித்தார்.
விமானப் போக்குவரத்து பாதிப்பு
எத்தியோப்பிய எரிமலையிலிருந்து எழுந்த சாம்பல் மேகம் இந்தியாவை அடைந்ததையடுத்து, இந்திய விமான நிறுவனங்கள் எச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்கத் தொடங்கின.
ஏர் இந்தியா நிறுவனம் நேற்றும் இன்றும் மொத்தம் 11 விமானங்களை ரத்து செய்தது. இதற்குக் காரணம்: எரிமலை வெடிப்புக்குப் பிறகு சாம்பல் மேகம் மிதந்த பகுதிகள் மீது பறந்த விமானங்களில் பாதுகாப்பு சோதனைகள் செய்ய வேண்டும் என்ற இந்திய விமானப் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தி உள்ளது..
ஆகாசா ஏர் நிறுவனத்தின் ஜித்தா, குவைத், அபுதாபி போன்ற மத்திய கிழக்கு தளங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் இரண்டு நாட்களுக்கு நிறுத்தப்பட்டன. எரிமலை சாம்பல் மேகங்கள் விமான என்ஜின்களுக்கு மிக ஆபத்தானவை என்பதால், உலகின் பல விமான நிறுவனங்களும் இதைப் பற்றிய எச்சரிக்கைகளை பொதுவாக கடுமையாகப் பின்பற்றுகின்றன.
Read More : அரிதான Layoff.. பல ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஆப்பிள் நிறுவனம்! இதுதான் காரணமாம்!



