வாலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே. சூர்யா.. முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த குஷி, நியூ, அன்பே ஆயிருரே ஆகிய படங்களை இயக்கினர்.. ஆனாலும் தொடர்ந்து ஸ்பைடர், மெர்சல், மாநாடு, டான், ஜிகர்தண்டா 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.. தனது நேரத்தியான நடப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் ஒரு நடிகராகவும் இடம் பிடித்தார்..
இந்த நிலையில் பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா 10 ஆண்டுகளுக்கு பிறகு கில்லர் என்ற படத்தை நடித்து இயக்கி வருகிறார். இந்த படத்தில் ப்ரீத்தி அஸ்ராணி நாயகியாக நடிக்கிறார்.. இந்த படத்தை கோகுலம் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏஞ்சல் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் இந்த படம் உருவாகும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.. 2005-ம் ஆண்டுக்கு பிறகு அவர் எந்த படத்தையும் இயக்கவில்லை..
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை பெரம்பூரில் உள்ள பின்னி மில் வளாகத்தில் இன்று நடந்தது.. அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த சிலிண்டர் வெடித்து சிதிறி பயங்கர விபத்து ஏற்பட்டது.. இந்த விபத்தில் சிக்கிய மதன் என்ற 25 வயது இளைஞர் பலத்த காயமடைந்து உயிரிழந்தனர்.. இந்த விபத்தில் மேலும் 3 பேர் காயமடைந்தனர்..
அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.. மேலும் இந்த சம்பவம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. படப்பிடிபில் சிலிண்டர் வெடித்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..
Read More : தொடர்ந்து ட்விஸ்ட் கொடுக்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?



