தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்ட வாரியாக கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், நேற்றைய தினம் கோவை மாவட்டத்தின் பல்வேறு நிகழ்வுகளில் முதல்வர் பங்கேற்றிருந்தார். இந்நிலையில், சுற்றுப்பயணத்தின் 2ம் நாளான இன்று ஈரோட்டுக்கு முதல்வர் வருகை தந்தார்.
ஈரோடு மாவட்டத்தில் ரூ.605 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து முதலமைச்சர் பேசுகையில், தந்தை பெரியாரை தந்த ஈரோட்டிற்கு வந்ததில் திராவிட இயக்கத்தின் முதல் தொண்டனாக பெருமைக்கொள்கிறேன். தந்தை பெரியார் இல்லை என்றால் தமிழ்நாடு இந்த அளவு வளர்ச்சி அடைந்திருக்காது.
அவர் இல்லை என்றால் திராவிட இயக்கங்கள் இல்லை. ஈரோடு மாவட்டத்திற்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.9,327 கோடிக்கு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் 68.85 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஈரோட்டிற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் டிசம்பவர் 10 ஆம் தேதிக்குள் நிறைவேறும். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு டிசம்பர் 15 முதல் ரூ.1000 வழங்கப்படும் என்றார்.
தொடர்ந்து ஈரோடு மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அறிவிப்புகள் பின்வருமாறு.. கோடிசெட்டிப்பாளையம் நகராட்சிக்கு ரூ.4.50 கோடியில் அலுவலக கட்டிடங்கள் கட்டித்தரப்படும். புஞ்சை புளியம்பட்டி, கோபிசெட்டிப்பாளையம் நகராட்சிகளுக்கு புதிய அலுவலகங்கள் கட்டித்தரப்படும். சாயப்பட்டறை கழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சட்ட சிக்கல்களை தீர்க்க வல்லுநர் குழு அமைக்கப்ழுடும்.
ஈரோடு மாவட்டத்தில் 90 கிராம விவசாயிகளின் திட்ட அனுமதி பட்டாக்கள் நிரந்தர பட்டாக்களாக மாற்றப்படும். தோணிமடுவுவில் புதிய தடுப்பணை கட்டப்படும். பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தரப்படும் என்றார்.
Read more: திடீரென முடங்கிய Google Meet..! மீட்டிங்கில் சேர முடியாமல் பல பயனர்கள் அவதி..!



