இந்த மாவட்டத்தில் நவ.29, 30 தேதிகளில் அதி கனமழை…! வானிலை மையம் கொடுத்த அலர்ட்..‌!

tn rains new

மலாக்கா அருகே நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ‘சென்யார்’ புயலாக வலுப்பெற்று இந்தோனேசியாவில் கரையை கடந்தது. இலங்கை அருகே நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வட தமிழகத்தில் நவ.29, 30 தேதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ‘சென்யார்’ புயலாக வலுப்பெற்று, மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு இந்தோனேசியா பகுதிகளில் நிலவியது. பிறகு, தென்மேற்கு திசையில் நகர்ந்து, இந்தோனேசிய கடற்கரையை கடந்தது.தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை – இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது. இது இன்று வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேலும் வலுப் பெற்று, அதே திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், வட தமிழகம் – புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், 28-ம் தேதி கடலோர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 29-ம் தேதி வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 30-ம் தேதி வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், டிச.1, 2 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களிலும், 28-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது..

நாளை திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

ஓய்வூதியம் பெறும் நபர்களே கவனம்…! 30-ம் தேதிக்குள் இதை சமர்ப்பிக்க வேண்டும்…! மத்திய அரசு அறிவிப்பு…!

Thu Nov 27 , 2025
அரசு பத்திரங்களில் முதலீடு செய்யும் நீண்டகால ஓய்வூதிய நிதிகளின் முக்கிய நோக்கங்கள் மற்றும் நிகர சொத்து மதிப்பு கணக்கீடுடன் மதிப்பீட்டு வழிகாட்டுதல்களை ஒருங்கிணைப்பதற்கான ஆலோசனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பிஎஃப்ஆர்டிஏ), “அரசு பத்திரங்களில் முதலீடு செய்யும் போது நீண்ட காலத்திற்கு மட்டுமேயான நிதிகளின் முக்கிய நோக்கங்கள் மற்றும் நிகர சொத்து மதிப்பு கணக்கீடுடன் மதிப்பீட்டு வழிகாட்டுதல்களை ஒருங்கிணைப்பது” என்ற தலைப்பில் ஒரு விரிவான […]
pension 2025

You May Like