10 எக்ஸ்பிரஸ் இரயில்களில் ஏசி அல்லாத பெட்டிகளில் போர்வை, தலையணை உள்ளிட்டவை வழங்கும் திட்டம் கொண்டு வர தெற்கு இரயில்வே திட்டமிட்டுள்ளது.
இந்திய இரயில்வே துறையில் பொதுவாக AC பெட்டியில் பயணிகளுக்கு போர்வை, தலையணை வழங்கப்படுவது வழக்கம். ஆனால் ஏசி அல்லாத படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் (Non AC Sleeper) பயணிகளுக்கு இதுவரை அதுபோன்ற வசதி இல்லை. இந்த நிலையில் ஏசி அல்லாத படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் (Non AC Sleeper) பயணிக்கும் பயணிகளுக்கு குறைந்த விலையில் போர்வை, தலையணை உள்ளிட்டவை வழங்கும் திட்டம் கொண்டு வர தெற்கு இரயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக 10 இரயில்களில் வரும் 2026 ஜனவரி 1ஆம் தேதி முதல் துவங்கப்படவுள்ளது.
நீலகிரி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், மங்களூர் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், மன்னார்குடி எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், பால்காட் எக்ஸ்பிரஸ், சிலம்பு சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், தாம்பரம்-நாகர்கோவில் அதிவிரைவு எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் அதிவிரைவு எக்ஸ்பிரஸ், ஆலப்புழா அதிவிரைவு எக்ஸ்பிரஸ், மங்களூர் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ஆகிய இரயில்களில் போர்வை, தலையணை உள்ளிட்டவை வழங்கும் திட்டம் கொண்டு வர தெற்கு இரயில்வே திட்டமிட்டுள்ளது.



