“கல்விதான் உங்கள் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி..” பள்ளிக் குழந்தைகளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து..!

cm vijay n 1

தமிழகத்தில் 1 முதல் 3 வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், 4 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1-ம் தேதியும் பள்ளிகள் திறக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது..


இந்த சூழலில், தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை ஒரு வாரம் தள்ளி வைக்க வேண்டும் என்று தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு, பெற்றோர், கல்வியாளர்கள் என பல்வேறு தரப்பினரும் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்..

இதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள் ஜூன் 4-ம் தேதி திறக்கபடும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.. 1 முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது…

அதன்படி, கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படும் தேதி தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இன்று திறக்கப்பட்டது.. தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு சென்றனர்..

இந்த நிலையில் பள்ளிக் குழந்தைகளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ இந்தக் கல்வி ஆண்டின் முதல் நாளை, புதிய நம்பிக்கையோடு தொடங்கும் என் அன்பிற்குரிய மாணவச் செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

கல்விதான் உங்கள் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி. உயரிய கனவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள், அதற்கேற்ப கடினமாக உழையுங்கள். பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றமாக இருக்கட்டும். மகிழ்ச்சியாக கற்றுக்கொள்ளுங்கள், வெற்றி உங்களைத் தேடி வரும்!” என்று குறிப்பிட்டுள்ளார்..

Read More : வாக்குக்கு ரூ.2000 பணம் கொடுத்தோம்.. ஓபனாக பேசிய தவெக வேட்பாளர்.. பரபரப்பு..

RUPA

Next Post

கிச்சனில் உள்ள இந்த ஒரு பொருளைக் கொண்டு தொப்பையை கரைக்கலாம்..! தினமும் காலையில் இதை செய்யுங்க..!

Thu Jun 4 , 2026
Certain items easily available in our kitchen can also help control body weight. Lemon is one of them.
belly fat

You May Like