‘டிட்வா’ புயலால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், 5 கிமீ வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சற்று நேரத்தில் தமிழக – புதுச்சேரி கடலோர பகுதியில் இருந்து 25 – 50 கிமீ தொலைவில் புயல் மையம் கொள்ளும் என தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து இன்று மாலை புயல் வலுவிழக்கும். மேலும், காலை 7 மணி வரை சென்னை, நாகை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு இலங்கை பகுதிகளில், யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்கே சுமார் 80 கிமீ தொலைவிலும், வேதாரண்யத்திலிருந்து தென்கிழக்கே 140 கிமீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கே 280 கிமீ தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கே 380 கிமீ தொலைவிலும் டிட்வா புயல் நிலை கொண்டுள்ளது. இது, மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும். புயல் நகர்ந்து வரும்போது காலையில், சென்னையில் இருந்து 50 கிமீ தொலைவிலும், மாலையில் 25 கிமீ தொலைவிலும் நிலவக்கூடும்.
இன்று திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இந்நிலையில், 5 கிமீ வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சற்று நேரத்தில் தமிழக – புதுச்சேரி கடலோர பகுதியில் இருந்து 25 – 50 கிமீ தொலைவில் புயல் மையம் கொள்ளும் என தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து இன்று மாலை புயல் வலுவிழக்கும். மேலும், காலை 7 மணி வரை சென்னை, நாகை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.



