சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோட்டில் மனோஜ் ஒரு பெண்ணை பிஏ-வாக வேலைக்கு வைக்கிறான். ஜீவா என்ற அந்த பெண் நம்ம மேரேஜ் காம்போன்னு புதுசா ஒன்னு அறிமுகப்படுத்தலாம் சார். கல்யாணத்துக்காக சீர் வாங்குறவங்களுக்கு, டிஸ்கவுன்ட்ல நம்ம எல்லா பொருளையும் சேர்த்து வழங்கினால் பெரிய ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என சொல்கிறாள். மனோஜ், ரோகிணி இருவரும் இந்த ஐடியா சூப்பரா இருக்கு என்கிறார்கள்.
இதற்காக விளம்பர வீடியோ ஒன்று செய்யலாம் என்று திட்டம் போடுகின்றனர். யாரை வைச்சு இதை எடுக்கிறது என்று பேசும்போது, நீங்களே பண்ணுங்க சார் என்று ஜீவா சொல்கிறாள். அதனைக்கேட்டு விடு மனோஜ் நம்மளே நடிக்கலாம் என சொல்லி வீடியோ எடுக்கின்றனர். அதனை எடிட் பண்ணி சோஷியல் மீடியாவில் போடுகின்றனர். அதனை தொடர்ந்து ரோகிணிக்கு போன் வருகிறது. உடனே ரோகிணி வெளிய போய் பேசிட்டு வர்றேன் என சொல்லி விட்டு போகிறாள்.
பிஏ வழக்கம்போல அவளிடம் பணம் கேட்டு பேசுகிறான். அதற்கு ரோகிணி இல்லையென சொல்ல, மனோஜை பார்த்து உன்னைப்பற்றி சொல்ல போறேன் என்று மிரட்டுகிறான். இதனிடையில் மலைக்கு சென்ற முத்து வீடு திரும்புகிறான். மீனா மறுபடியும் வந்து விட்டதை தெரிந்து ஹேப்பி ஆகிறான்.
முத்துவிடம் இனிமேல் குடிக்க மாட்டீங்கள்ள என்று மீனா கேட்க, அது வந்து ஏதாவது பங்ஷன் சமயத்துல மட்டும் குடிப்பேன்னு சபரிமலைல வேண்டு இருக்கேன் என்கிறான். அதன்பின்னர் முத்து கொண்டு வந்த பிரசாதத்தை எடுத்துக்கொண்டு அம்மா வீட்டுக்கு வருகிறாள் மீனா. அப்போது அங்கு வரும் சீதா, ஹாஸ்பிட்டல்ல ஒரு அம்மா அவுங்க பையனுக்கு பீஸ் கட்டுறதுக்காக கலெக்ஷன் பணத்துல இருந்து காசு எடுத்து இருக்காங்க.
இப்போ அவுங்க பண்ண விஷயத்துக்கு நானும் துணை போற மாதிரி இருக்கு என்று சொல்லி அம்மாவிடம் புலம்புகிறாள். இதனைக்கேட்டதும் மீனாவுக்கு ரோகிணியின் நினைவு வருகிறது. உடனே அவளுக்கு போன் பண்ணி, உன்னை நேர்ல பார்த்து பேசனும் என்று சொல்கிறாள்.
இதனையடுத்து மகேஸ்வரி வீட்ல தான் இருக்கேன். நீங்க வாங்க என்கிறாள் ரோகிணி. அந்த சமயம் வித்யா அங்கு வருகிறாள். மீனாவை பார்த்து ஷாக்காகி, நீங்க கிரீஷை பார்க்க வந்தீங்களா? ரோகிணி நீ மகேஸ்வரியை பார்க்குறதுக்கு வந்து இருக்க. கரெக்ட் தான என்று கேட்கிறாள். மீனாவுக்கு உண்மை தெரிந்த விஷயத்தை அறியாமல் வித்யா என்னென்னவோ உளறிக் கொண்டிருக்கிறாள்.
Read more: வாழை இலையில் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!



