கறம்பக்குடி அருகே உள்ள நெய்வேலி கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ்.. டிரைவராக வேலை செய்து வரும் இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அட்சயா என்ற பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளனர். 30 வயதான அட்சயா, அழகுக்கலை நிபுணராக உள்ளார். இந்த தம்பதிக்கு 5 வயதான ஆண் குழந்தை ஒன்று உள்ளது. தர்மராஜ் டிரைவராக வேலை செய்து வருவதால், அவர் பெரும்பாலும் வீட்டில் இருப்பது இல்லை. இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த அட்சயா, இன்ஸ்டாகிரராமில் அதிக நேரம் செலவிட்டு வந்துள்ளார். அப்போது, அட்சயாவுக்கும் ஜோஸ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இதையடுத்து, ஜோஸ் அட்சயாவின் வீட்டிற்க்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். ஒரு கட்டத்தில், இவர்களின் தொடர்பு குறித்து தர்மராஜுக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த தர்மராஜ், கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கண்டித்துள்ளார். ஆனால் அட்சயா தொடர்ந்து ஜோசுடன் பழகி வந்துள்ளார். ஒருமுறை அட்சயா மற்றும் ஜோஸ் ஒரே வீட்டுக்குள் இருக்கும் போது, தர்மராஜ் அவர்களை கையும் களவுமாக பிடித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தர்மராஜ், தனது மனைவியை விட்டு பிரிந்து சென்றுள்ளார். மேலும், கடந்த மாதம் ஜோஸ், தனது மனைவியை சந்திக்க வந்துள்ளதை கேள்விப்பட்டுள்ளார்.
இதையடுத்து, அவர் வீட்டிற்க்குள் சென்று பார்த்த போது, கள்ளக்காதலர்கள் இருவரும் கையும் களவுமாக சிக்கினர். தர்மராஜ் அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டார். அந்த வீடியோவில், தர்மராஜ் தனது மனைவியிடம் “இது என்ன டிரஸ்ஸு? அவனை வெளியே வர சொல்லு. உள்ளே யாரு, வெளியே வர சொல்லு, என் பொண்டாட்டியுடன் ஏன் ஸ்டே பண்ணுறே? என்று ஆவேசத்துடன் பேசியிருந்தார். மேலும், வீட்டிற்குள் ஜோஸை பார்த்ததுமே, ஆத்திரம் தாங்க முடியாமல் தர்மராஜ் தனது மனைவியின் முகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டி விட்டு குழந்தையுடன் தலைமறைவானார்.
அதேநாளில் இன்னொரு வீடியோ வெளியிட்டு, மகனை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்ய போவதாக அழுது கொண்டே கூறியிருந்தார். ஆனால், காவல்துறையினர் சிறுவனை மீட்டு தர்மராஜையும் கைது செய்தனர். இந்நிலையில், தர்மராஜா தற்போது ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். “மக்கள் அனைவருக்கும் வணக்கம்.. என் பெயர் ராஜா.. கடந்த மாதம், நானும் என் மகனும் சாகப்போகிறோம் என்று சொல்லி வீடியோ பதிவிட்டு, அனைவரையும் கஷ்டப்படுத்தி விட்டேன்.. அந்த கோபத்தில் அப்படியெல்லாம் செய்துவிட்டேன்.. நான் அப்படி நடந்து கொள்ளும் நபரும் கிடையாது. என் மகனும், மனைவியும் இப்போது அவர்களது வீட்டில் நன்றாக இருக்கிறார்கள்..
நான் சிறையிலிருந்து அப்போதே வெளிவந்துவிட்டேன்.. சோஷியல் மீடியா பக்கம் வரக்கூடாது என்று நினைத்தேன்.. ஆனால் என் மனைவிக்கு போன் செய்து தேவையில்லாத வார்த்தைகளை சிலர் பேசுவதாக கேள்விப்பட்டேன்.. ஆனால், என் மனைவி நல்லவர் தான்.. என் மேலயும், என் பிள்ளை மேலயும் உயிராக இருக்ககூடியவர். அதே போல எனக்கும் கஞ்சா, போதை பழக்கம் உள்ளதாக என் மனைவி புகாரில் கூறியிருந்தார். அப்படியெல்லாம் நான் கிடையாது.. என் மீதுள்ள கோபத்தில் என்னை பற்றி அப்போது தவறாக சொல்லிவிட்டார் என் மனைவி.
3 முடிச்சு போட்டுவிட்டதாலேயே ஒரு பெண்ணின் மனசும், உடம்பும் எனக்கு மடடுமே சொந்தம் என்று நினைக்கக்கூடியவன் நான் இல்லை.. மனைவி, மகனை விட்டால் எனக்கு யாருமில்லை.. இது என் மனைவிக்கே நன்றாக தெரிந்தும், என்னை வேண்டாம் , வேண்டாம் என்று ஓதுக்கவும் தான் என்னால் அதை ஏத்துக்க முடியல.. அதனால்தான் கோபத்தில் அப்படி நடந்துவிட்டது. என் மனைவியிடம் எப்படி மன்னிப்பு கேட்பது என்று தெரியவில்லை.. எதிர்காலத்தில் ஒன்றுசேர்ந்து நாங்கள் வாழுவோமோ என்றும் தெரியல.. என்ன தப்பு செய்திருந்தாலும், அவர் என்னுடைய மனைவி.. யாரும் என் மனைவியை திட்ட வேண்டாம். என் மகன் நல்லபடியாக வாழ வேண்டுமானால் என் மனைவி வேண்டும்..
என் பிரச்சனை இப்போது பொதுவெளிக்கு வந்துவிட்டது.. என் குடும்பத்தை நானே அசிங்கப்படுததிவிட்டு, குற்றவாளியாக நான் இன்று உள்ளேன். காவல்துறைக்கு என்னுடைய நன்றி.. அவர்கள் இலலாவிட்டால் நான் இன்று இல்லை. என் மகனை ஒரு மாதம் நல்ல முறையில் பார்த்துக்கிட்ட குழந்தைகள் நல காப்பகத்துக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.. வேற என்ன சொல்வது தெரியல.. நன்றி மக்களே” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: “சார்… நான் கள்ளக்காதல் தான் பண்ணேன்!” – போலீசுக்கு லஞ்சம் கொடுத்த நபர்… இறுதியில் நடந்த அதிரடி!



