சென்னை அருகே கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.
கடந்த 30-ம் தேதி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழகம் -புதுவை கடலோரப்பகுதிகளில் நிலவிய “டிட்வா” புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்தது.. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் நகரும் என்று வலுகுறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் இது நகராமல் சென்னை கடற்கரை பகுதியிலேயே 18 மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது.. இதனால் நேற்று முன் தினம் முதல் சென்னை, திருவள்ளூர், மற்றும் புறநகர் பகுதிகள் கனமழை கொட்டி தீர்த்தது.. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்றும் கனமழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டது..
இந்த நிலையில், சென்னை அருகே கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.. இது கடற்கரையை நோக்கி நகரும் போது மேலும் வலுவிழக்க வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இது அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக பலவீனமடைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது..
கடலூரில் இருந்து 150 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 130 கிமீ தொலைவிலும், நெல்லூரில் இருந்து 180 கி.மீ தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது.. தமிழ்நாடு – புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் இருந்து 25 கி.மீ தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 40 கி.மீ தொலைவில் இருப்பதால் இன்று சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
Read More : EPS விமர்சனத்திற்கு பதில் சொல்ல அவர் ஒன்னும் பெரிய தலைவர் இல்ல..!! – செங்கோட்டையன் நச் பதில்..



